இளையராஜா எம்பி தமிழகத்துக்கு கொண்டுவர இருக்கும் உலகே வியக்கும் பிரமாண்டம் திட்டம் என்ன தெரியுமா.?

2

ஆயிரம் படங்களுக்கு மேல் பின்னணி இசை, ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானி இளைராஜாவை பெருமை படுத்தும் விதத்தில் மத்திய அரசு அவருக்கு மாநிலங்கவை உறுப்பினர் பதவி வழங்கி கௌரவ படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை இளையராஜாவுக்கு மத்திய அரசு வழங்கி கௌரவ படுத்தியுள்ள நிலையில், தற்பொழுது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கூடுதல் கௌரவத்தை அளித்துள்ளது.

இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டும் , ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அணைத்து தரப்பு மக்களால் கொண்டாட கூடியவர், மறைந்த முன்னால் திமுக தலைவர் கருணாநிதியால் இசைஞானி என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டவர். இதே போன்று பல இடங்களில் மறைந்த முன்னால் முதல்வர்களான, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் பாராட்டை பெற்றவர். இதே போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் அவரை அடைத்தும் விட முடியாது.

இசை தான் வாழ்க்கை, இசையை தவிற வெறும் ஒன்றும் தெரியாது, ஆனால் இசையில் இவரை மிஞ்சும் அளவுக்கு இந்த உலகில் யாரும் இல்லை என்பது போன்று இசையுடன் வாழ்ந்து வருகின்றவர் இசைஞானி இளையராஜா. ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு அன்று இரவு 12 மணியளவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு இசைஞானி இசையில் உருவான சகல கலா வல்லன் படத்தில் இடம்பெற்ற ஹாப்பி நியூஇயர் பாடல் தான் இப்போதும் ஒலிக்கிறது.

இது போன்று காலத்தால் அழியாத பல மெட்டுக்களை போட்ட இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாத இளையராஜா பாராளுமன்றம் சென்று தமிழக நலனுக்காக என்ன பேசுவார், என்ன திட்டம் கொண்டு வர இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு எம்பியாக இளையராஜாவின் திட்டம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவுக்கு நீண்ட நாள் கனவு என்பது தமிழகத்தில் உலக தரம் வாய்த்த இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது, தற்பொழுது உலகில் டாப் இசை பல்கலைக்கழகமாக, லண்டனில் உள்ள ராயல் கல்லேஜ் மியூசிக் உள்ளது, இது சுமார் 140 வருடம் பழமை வாய்ந்த இசை கல்லூரி, இதே போன்ற உலக தரம் வாய்த்த ஒரு இசை கல்லூரியை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் தற்பொழுது இறங்கியுளள இளையராஜா.

இது குறித்து வருகின்ற பாராளுமன்றதின் அவருடைய முதல் உரையில் பேச இருப்பதாக கூறப்படுகிறது. உலக தரத்துடன் தமிழகத்தில் இசை கல்லூரி அமைக்கப்பட்டால், வெளிநாட்டில் இருந்து பல மாணவர்கள் இசை கற்க தமிழகம் நோக்கி வருவார்கள் என்பது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில் இளையராஜாவின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட தமிழ் திரையுலகினர் மகிழ்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை விட்டு போகும் சூரி… யோகிபாபு வைத்த ஆப்பு… சூரியின் பேராசையால் என்ன நடந்தது தெரியுமா.?

2 COMMENTS

  1. இந்த விசயம் இளையராஜாவுக்கு தெரியுமா ?? சும்மா அடிச்சு விடுங்க !! ஆனா புருடா விடுவதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை !! இளையராஜா ஒரு தலைக்கனம் பிடித்த மனித நேயம் இல்லாத மனிதர்களை மதிக்காத தெரியாத திமிர் பிடித்த ஒரு சுயநலவாதி – சாமியார் என்று சொல்லிக் கொண்டு பணம் ஒன்றே வாழ்க்கை – இவர் இல்லை என்றால் தமிழ் நாட்டில் இசையே இல்லை என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு சந்தர்ப்பவாத மிருகம் !!

  2. இந்த விசயம் இளையராஜாவுக்கு தெரியுமா ?? சும்மா அடிச்சு விடுங்க !! ஆனா புருடா விடுவதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை !! சாமியார் என்று சொல்லிக் கொண்டு பணம் ஒன்றே வாழ்க்கை – இவர் இல்லை என்றால் தமிழ் நாட்டில் இசையே இல்லை என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு சந்தர்ப்பவாத மிருகம் !!

Comments are closed.