ஓசில கூட வேண்டாம்.. நயன்தாரவை அசிங்கப்படுத்திய நிறுவனம்.. கோபத்தில் நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வந்த நடிகை நயன்தாரா தற்பொழுது அவருடைய திருமணத்துக்கு பின்பு முன்னனி நடிகர்கள் செய்த காரணத்தினால் உச்சகட்ட அவமானத்தை சந்தித்து வருகிறார். கேரளாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்த நயன்தாரா, ஐயா படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக இயக்குனர் ஹரி அறிமுக படுத்தினர். முதல் படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருதேன் என்கிற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதன் பின்பு பட வாய்ப்புகள் அவருக்கு இருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை, ஆனால் பிரபு தேவா உடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின்பு ரீ – என்ட்ரி கொடுத்த நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார். டாப் நடிகையாக இருக்கும் போதே ஏழு வருடமாக காதலித்து வந்த காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்தை பிரபல OTT நிறுவனமான பிரபல நிறுவனத்துக்கு விலை பேசினார்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, அவர்களும் சுமார் 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஓகே சொல்லி, எங்களுக்கு உங்கள் திருமண நிகழ்வை ஒரு திரைப்படம் போன்று எடுத்து தாருங்கள் என நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் தெரிவிக்க, உடனே இதை படமாக்க கௌதமேனனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் கல்யாண நிகழ்வை வாங்க முன் வந்த பிரபல நநிறுவனம் சில கண்டிஷன் போட்டது, அதாவது, இந்த கல்யாண நிகழ்வுகள் புகைப்படமாக அல்லது வீடியோவாக எந்த ஒரு காரணத்திற்காக எங்களை தவிர வேறு யாரும் வெளியிட கூடாது. இந்த கண்டிஷனை ஏற்று திருமணம் நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு தொலைபேசி அனுமதி மறுக்கப்பட்டு, இது போன்ற பல கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் ரூபாய் 25 கோடிக்கு திருமண நிகழ்வை விலை பேசி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த நிகழ்வை ஒளிபரப்பவில்லை. நயன்தாரா திருமணத்துக்கு முன்னனி நடிகர்களான விஜய், அஜித், கமல், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னனி நடிகர்கள் பங்கேற்பார்கள் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் எதிர்பாத்துள்ளது.

அந்த எதிர்பார்ப்பில் தான் 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஓகே தெரிவித்துள்ளது பிரபல நிறுவனம், ஆனால் ரஜினிகாந்த் தவிர்த்து மற்ற முன்னனி நடிகர்கள் யாரும் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து திருமணம் முடிந்து பிரபல நிறுவனம் நயன்தாரா திருமணம் வீடியோவை வாங்குவதில் இருந்து ஜகா வங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து பேசப்பட்டு வந்துள்ளது.

ஆனால் நெட்பிலிக்ஸ் நிறுவனம் உங்கள் திருமணம் நிகழ்வு நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று தெரிவித்துள்னனர், ஒரு கட்டத்தில் பேசியதை விட குறைத்து வாங்க பேரம் பேசிய போது, நீங்கள் ஓசியில் கொடுத்தால் கூட வேண்டாம் என நயன்தாரா தரப்பில் பேசியவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்து நயன்தாராவை அசிங்கப்படுத்தும் விதத்தில் அந்த பிரபல நிறுவனம் நடந்து கொண்டதா கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த தகவல் நயந்தாராவுக்கு தெரியவர, உடனே வேறு ஒரு நிறுவனத்திடம் பேசலாம் என்று முடிவு செய்தவர், தன்னுடைய திருமண நிகழ்வை விளம்பர படுத்தும் விதத்தில் திருமணத்தில் எடுத்து முக்கிய பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இருந்தும் எந்த ஒரு நிறுவனமும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வை வாங்க முன் வருவது போன்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

படு மொக்கையாக அமைந்த பொன்னியின் செல்வன்… சினிமா ரசிகர்களை ஏமாற்றும் மணிரத்தினம்.!