எடப்பாடிக்கு ஓபிஎஸ் வைத்த செக்… கடைசி நேரத்தில் ஓபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா.?

0

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இது ஏற்கனவே திட்டமிட்ட ஓன்று தான். கடந்த சில மாதங்களாக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து வந்ததை தொடர்ந்து, இதற்கு முன்பு வரை பொறுமை காத்து வந்த ஓபிஎஸ் இம்முறை தனது அரசியல் ஆட்டத்தை விறுவிறுப்பாக அட தொடங்கினார்.

ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொது குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஓபிஎஸ். இந்த வழக்கு ஜூலை 11ம் தேதி விசாரணைக்கு வந்தது, அதே ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்காக ஏற்பாடுகளை தீவிரமாக செயல்பட்டு வந்தது எடப்பாடி அணியினர். இந்நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பில் பொதுக்குழு நடத்த தடை ஏதும் நீதிமன்றம் விதிக்காது என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்ட ஓபிஎஸ், தனது அடுத்த கட்ட திட்டத்தை கையில் எடுத்தார்.

சென்னனை வானகரத்தில் பொதுக்குழு நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு, சென்னை ராயபுரத்தில் அமைத்துள்ள அதிமுக அலுவலத்தை நோக்கி தனது ஆதரவாளர்கள் படைசூழ சென்று கொண்டிருந்தார் ஓபிஎஸ், அவரை வழிமறித்து தடுக்க எடப்பாடி அணியினர் களத்தில் இறங்க இரண்டு கோஷ்டிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது, இதில் எடப்பாடி கோஷ்டியை ஓட ஓட விரட்டிய ஓபிஎஸ் கோஷ்டி இறுதியில் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியது.

பூட்டியிருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் கோஷ்டி முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, அந்த பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தான் ஓபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட வேண்டும் என்பதர்க்காகவே திட்டமிட்டு அதிமுக அலுவலகத்துக்குள் வந்துள்ளார் ஓபிஎஸ்.

நேற்று அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால், அதிமுக அலுவகத்தின் உள்ளே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும அதிமுக விவகாரம் தற்பொழுது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, விரைவில் தேர்தல் ஆணையம் இது குறித்த விசாரணையை தொடங்க இருக்கிறது. அதே நேரத்தில் பொது குழு கூட்டம் நடந்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தாலும்.

ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றம் சென்று, அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக பொது குழு நடத்தப்பட்டதாகவும், அதனால் அந்த பொது குழுவில் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது என்பதர்க்கான ஆதாரங்களை முன் வைத்து, நடந்து முடிந்த பொதுக்குழு செல்லாது என்கிற தீர்ப்பை ஓபிஎஸ் தரப்பு பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதே நேரத்தில் தற்பொழுது இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் பார்வைக்கு சென்றுள்ளதால்.

இதற்கு முன்பு சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக நிமைக்கப்பட்ட போது, செல்லாது என்கிற தீர்ப்பை சுட்டி காட்டி எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்து, மேலும் யாரும் அதிமுக என்கிற கட்சியின் பெயரை பயன்படுத்த தடை விதித்தும், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதன் பின்பு இரண்டு தரப்பினரும் நீதிமன்றம் சென்று, யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க வேண்டும்.

அப்படி இவர்கள் இருவரும் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று வருடம் ஆகலாம். அதற்குள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு அணியில் யாரும் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட முடியாது, மேலும் இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக அலுவலகம் பூட்டியே இருக்கும். இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து யார் உண்மையான அதிமுக என்கிற தீர்ப்பு வரும் போது, அதிமுக என்கிற கட்சி கரைந்து காணாமல் போகும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

சிறைக்கு செல்லும் பயில்வான்…. மீனா குறித்து தவறான பேச்சு…. என்ன சொன்னார் தெரியுமா.?