இதெல்லாம் ஒரு படமா.? விக்ரம் – மணிரத்தினம் இடையே உச்சக்கட்ட மோதல்… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் டீசர் வெளியான படம் பொன்னியின் செல்வன், இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்னனர், இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட், பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என இந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட பில்டப்பை நம்பி எதிர்பார்த்த மக்களுக்கு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் டீசர் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது.

இந்த படத்திற்கா 500 கோடி பட்ஜெட் என மக்கள் கேள்வி எழுப்பும் வகையில் சிறிய பட்ஜெட் படம் போன்றே அமைத்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக அந்த படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர்.ரகுமானுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பித்த போது. படத்தை பார்த்து விட்டு இயக்குனர் மணிரத்தினத்தை அழைத்து படம் எனக்கு திருப்தியில்லை படத்தில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என ஏ.ஆர்.ரகுமான் வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மணிரத்தினம் படத்தில் சில மாற்றங்களை செய்து மீண்டும் ஏ.ஆர்.ரகுமானிடம் திரையிட்டு காண்பிக்கப்பட்டு, அதன் பின்பு இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தார் ஏ.ஆர்.ரகுமான். இது போன்று அந்த படத்தில் பணியாற்றிய பலரும் படம் பாகுபலி அளவுக்கு பில்டப் கொடுப்பதெல்லாம் ரெம்ப ஓவர் தான். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தை பீட் பண்ணுமா என்று பார்க்கலாம் என்கிற மனநிலையில் தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக யாரும் வராததால், அந்த படத்தில் நடித்த நடிகர் , நடிகைகளை வைத்து பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மேலும் அந்த படத்தில் நடித்த நடிகர் விக்ரம், நடிகை ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் கூட பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவை புறக்கணித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் நடிகர் விக்ரம் படத்தின் டீசர் வெளியிட்டு அன்று திடிர் உடல் நல குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இதற்கான காரணம் குறித்து தற்பொழுது வெளியாகியுள்ளது. உடல் நலம் காரணமாக விக்ரம் மருத்துவமனையில் சேரவில்லை, இயக்குனர் மணிரத்தினம் மீது ஏற்பட்ட மோதல் காரணமாக டீசர் வெளியிட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ஹீரோவாக விக்ரம் தான் என்று படத்தில் கதை சொல்லும் போது மணிரத்தினம் தெரிவித்துள்ளார், ஆனால் தற்பொழுது விக்ரம் நடித்த காட்சிகள் மிக குறைந்த அளவே இடம்பெற்று, மற்ற நடிகர்கள் காட்சிகள் அதிக அளவு இடம்பெற்றுள்ளது குறித்து என்ன படம் எடுத்து வெச்சுருக்கீங்க, இதெல்லாம் ஒரு படமா.? என மணிரத்தினம் மற்றும் விக்ரம் இடையே சண்டை நடந்ததாகவும், அதனால் தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவை புறக்கணிக்க மருத்துவமனையில் அட்மிட் ஆனார் விக்ரம் என கூறப்படுகிறது.

சிறைக்கு செல்லும் பயில்வான்…. மீனா குறித்து தவறான பேச்சு…. என்ன சொன்னார் தெரியுமா.?