விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் மேதகு…

0
Follow on Google News

மேதகு திரைப்படத்தை இயக்குநர் கிட்டு எழுதி இயக்கியுள்ளார். இந்த மேதகு திரைப்படம் வரலாற்றில் உற்றுக் கவனிக்க கூடிய தமிழீழத்தில் நடந்த உண்மை சம்பவங்களையும், விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மேதகு திரைப்படத்தை தமிழீழ திரைகளம் தயாரிப்பில், உலக தமிழர்களின் பெரும் ஆதரவோடு மேதகு திரைப்படம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பிரவீன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் ரியாஸ் ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றியுள்ளார். எடிட்டர் சி.எம். இளங்கோவன் எடிட்டிங் செய்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 26, 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், மேலும் பல பிரச்சனைகளாலும் இந்த திரைப்படம் 2021 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜீன் 25, 2021 இல் BS VALUE தளத்தில் வெளியானது மேதகு திரைப்படம். அமேசான் பிரைம் இந்தத் மேதகு திரைப்படத்தில் வெளியிடும் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. IMDBயில் 10க்கு 9.9 ரேட்டிங் கொடுத்துள்ளனர். தமிழீழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ஆதரவு பெருகி வருகிறது.

தமிழீழத்தில் நடந்த சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளும், தமிழீழத்திற்கு அவர்கள் செய்த துரோகங்களையும் மேதகு வெளிக்கொண்டு வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்படி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எப்படி போராட தொடங்கினார்? என்பதையும், இலங்கையில் நடந்த அரசியல் சூழ்நிலை, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுமைகளும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகதமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள அரசால் தாக்குதலில் கொல்லப்பட்ட 9 தமிழர்களும், சொந்த இனமான தமிழ் இடத்திற்கு துரோகம் செய்த மேயர் துறையப்பாவை தமிழ் புலிகள் தலைவர் பிரபாகரனும் அவருடைய தோழர்களுடன் இணைந்து எப்படி கொலை செய்கிறார் என்பதை கடைசி காட்சியாக வைத்து இப்படம் முடிக்கின்றனர்.