அத்தையின் கள்ள உறவுக்கு ஆதரவளித்த மருமகனை ஓட விட்டு விரட்டி கொன்ற மகன்…

0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள சிறுவத்தி கிராமத்தை சேர்ந்த 37வயதுடைய கூலி தொழிலாளி சிவா. இவருக்கு வித்யா என்ற பெண்ணுடன் காதல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. சிவாவின் அத்தையான ராஜேஸ்வரி இந்த கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அத்தை ராஜேஸ்வரி சித்தானூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபாலுடன் கள்ள உறவு வைத்துள்ளார். இவர்களது கள்ள உறவு பிரச்சினை இல்லாத உறவாக தொடர்ந்தது.

ஒரு சில மாதங்கள் முன்பு ராஜகோபாலன் தனது கள்ள காதலி ராஜேஸ்வரியை சந்திக்க அவருடைய வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது ராஜேஸ்வரியின் மகன் ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து ராஜகோபாலனை ஆத்திரத்தில் பலமாகத் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டு வழங்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் சிவா தனது அத்தை ராஜேஸ்வரிக்கு ஆதரவாக பரிந்து கட்டி பேசி வந்துள்ளார். இப்படி சிவா‌ அத்தை ராஜேஸ்வரியின் கள்ள உறவுக்கு ஆதரவாக பேசுவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. மேலும் ஆத்திரத்தை தான் மூட்டியது. இதனால் சிவாவை கொலை செய்ய உறவினர்களுடன் திட்டம் தீட்டினான் ஸ்டாலின். நேற்று இரவு சிவா தேவகோட்டையில் இருந்து தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன் திரும்பி கொண்டு இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஸ்டாலின் சிவா கிராமத்திற்குள் நுழையும் போது, எதிர்பாராத நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. இவர்களிடம் இருந்து தப்பிக்க முயலுவதற்குள் சிவாவை வெட்டினார் ஸ்டாலின். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பி ஓட, விடாமல் துரத்திய கும்பல் சரமாரியாக 13 இடங்களில் வெட்டி வெட்டி சாய்த்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடிக்க சிவா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதையடுத்து தகவலறிந்து விரைந்த வந்த திருவேகம்பத்தூர் போலீசார் கொலையான சிவாவின் உடலை மீட்டு தேவகோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவாவை கொலை செய்த ஸ்டாலின் உட்பட 8 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.