துபாயில் காயத்ரி ரகுராம் ரகசிய திட்டம்… கையும் களவுமாக அண்ணாமலை பிடித்தது எப்படி.?

0
Follow on Google News

ஒரு சில படங்களில் நடித்து அது சரிவர போகாதால், அடுத்தடுத்து நடன இயக்குனராக சில படங்களில் பணியாற்றியவர் நடிகை காயத்ரி ரகுராம். அமெரிக்க மாப்பிளையை திருமணம் செய்து மிக குறுகிய காலத்தில் விவாகரத்து பெற்று திரும்பியவர். அடுத்து தொடர்ந்து அவ்வப்போது சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி கொண்டே தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

ஆரம்ப கட்டத்தில் அப்போது மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மீது மோதல் போக்கை கடைபிடித்து வந்தவர் காயத்ரி ரகுராம். இதனால் அவருக்கு பாஜகவில் முக்கிய அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல் இருந்து விடுபட்டு ஆளுநராக சென்ற பின்பு தமிழக பாஜகவில் காயத்ரி ரகுராமுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

அவருடைய கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவையே ஏற்படுத்தி வந்து கொண்டிருந்தது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வந்த பின்பு கட்சியில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் காயத்ரி ரகுராம் வகித்த கலை கலாச்சார பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். சில காலம் எந்த ஒரு பதவியும் இல்லாமல் இருந்த காயத்ரி ரகுராம் மீண்டும் ஒரு முக்கிய பதவி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலை அசூர வளர்ச்சி பாஜகவில் இருக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக பல உள்ளடி வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தான் நடிகர் காயத்ரி ரகுராம் என்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசனை காயத்ரி ரகுராம் சந்தித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை காயத்ரி ரகுராம் மறுக்கவில்லை, ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது எதார்த்தமாக சந்தித்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் சபரீசன் சந்திப்புக்கு பின்பு தான் காயத்ரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பல உள்ளடி வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரத்தில் அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

திடீரென காயத்ரியை எதற்காக கட்சியில் நீக்கினார் என்கின்ற குழப்பம் பலருக்கு நீடித்து வந்த நிலையில் அண்ணாமலைக்கு எதிராக திமுகவுடன் காயத்ரி ரகுராம் கைகோர்த்த விஷயம் டெல்லி பாஜக தலைமை வரை சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. அப்போது பாஜக மாவட்ட தலைவர்களிடம் அண்ணாமலை பேசிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் தனக்கு தனக்கு எதிராகவும், பாஜகவின் வளர்ச்சிக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வரும் ஒரு பெண் துபாய் சென்றதும், அவர் அங்கே எங்கே தங்கினார், எதற்காக திமுக வினரை சந்தித்தார் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அதற்கான ஆதாரமும் உண்டு என தெரிவித்த அண்ணாமலை.

கட்சியில் இருக்கும் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் காவல்துறையில் பணியாற்றிய போதே உளவு பிரிவில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளேன் என்று மாவட்டத் தலைவர்கள் முன்னிலையில் பேசியுள்ளார் அண்ணாமலை. அந்த வகையில் துபாயில் முக்கிய திமுக ஒருவரை சந்தித்து காயத்ரி போட்ட ரகசிய திட்டம் என்ன என்பது அண்ணாமலை கவனத்திற்கு வந்துள்ளது.

இதனால் தான் காயத்ரி பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரகசியமாக காயத்ரி ரகுராம் துபாய் சென்றதையே கையும் களவுமாக பிடித்த அண்ணாமலை பார்வையில் நாம் இனி தப்பவே முடியாது என்கின்ற பீதியில் காயத்ரியுடன் கூட்டு சேர்ந்த ஒரு சில பாஜக நிர்வாகிகள் பீதியில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள்” உதயநிதிக்கு எதிராக பாஜக மாநில நிர்வாகியின் செயலால் பரபரப்பு..