காலி இருக்கைகள்… PS 2 பார்க்க ஆட்கள் இல்லை.. இதுல 200 கோடி வசூலாம்…நம்புற மாதிரியா இருக்கு.?

0
Follow on Google News

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இதற்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி திரையரங்குகளின் இருக்கைகள் காலியாக காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, பொன்னியின் செல்வன் பாகம் 2 கிடைக்கவில்லை.

இதில் பொன்னியின் செல்வன் பாகன் ஒன்று படம் வெளியாவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பு வரை அந்த படம் குறித்த மக்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலே இருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு சுமார் ஒரு மாதம் பட குழுவினர் கலந்து கொண்ட ப்ரொமோஷன் நிகழ்ச்சி மற்றும் விளம்பரம் அந்த படத்தை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டியது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் பங்கேற்று பேசியது இந்த படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகி அந்த படத்தை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வம் தூண்டியது. ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியடைந்து விட்டது என்கின்ற மிதப்பில் அதனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்தவர்கள் நிச்சயம் இரண்டாம் பாகத்திற்கு வருவார்கள் என்கின்ற மிதப்பில் இருந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர்.

மேலும் எப்படி மக்கள்மக்கள் தேடி வந்து பார்த்து விடுவார்கள், எதற்கு வீண் செலவு செய்து விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன் செய்ய, சிம்பலாக குறைந்த செலவில் முடித்து விடுவோம் என மணிரத்தினம் உட்பட பட குழுவினர் இருந்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை எதுவும் அவர்கள் பேசவில்லை.

ஆனால் இவர்கள் ஒரு சேட்டட் விமானத்தில் ஜாலியாக பயணம் செய்து செல்ஃபி எடுத்த புகைப்படம் மட்டுமே வெளியானது தவிர இவர்கள் அந்த படத்தில் நடந்த சில சுவாரஸ்யமான மக்களை தூண்டு விதத்தில் ஏதும் பேசவில்லை என்பது இந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சி தோல்வியை தழுவியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி வசூலாகும் என்று ஒரு தரப்பினர் அடித்து வாய்க்கு வந்ததை அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் தற்பொழுது 200 கோடி வரை வசூல் ஆகிவிட்டது என்கின்ற ஒரு செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சினிமா துறையை சார்ந்தவர்களிடம் விசாரித்ததில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியான போதே அந்த இரண்டு படத்திற்கான சேட்டிலைட் விற்பன, டிஜிட்டல் விற்பனை வியாபாரம் முடிந்துவிட்டது. அந்த வகையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் பாகம் 2 திரையரங்குகளின் வசூல் மட்டுமே எவ்வளவு என்று தான் கணக்கிட வேண்டும்.

மற்றபடி மற்ற வியாபாரங்கள் ஏற்கனவே முடிந்து விட்டது, அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அதிகபட்சம் 300 கோடி வரை வசூல் ஆகும் என்பது நிதர்சனம், இதில் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு சொல்லலாம் ஆயிரம் கோடி சொல்லலாம், இரண்டு மூன்று நாளில் 200 கோடி என்று சொல்லலாம் ஆனால் அதெல்லாம் ஏற்றுக் கொள்வது போன்று இல்லை.

அதுவுமே 300 கோடி என்பது அது மொத்த வசூல் தான், அந்த வசூலில் வரியெல்லாம் கழித்து விட்டால் 240 கோடி வரை வரும், மேலும் திரையரங்குகளுக்கானன பங்கு மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கான பங்குகள் என அனைத்தையும் கழித்து விட்டால் சுமார் 300 கோடி வசூல் ஆகும் படத்தில் 140 கோடி வரை மட்டுமே தயாரிப்பாளர்கள் கைக்கு கிடைக்கும், ஆகையால் ஒரு பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் எவ்வளவு வசூல் என்பது பெரிய விஷயம் அல்ல தயாரிப்பாளருக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பதே முக்கிய விஷயம்.

மேலும் அந்த படத்தை வாங்கியவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை தான் கணக்கிட வேண்டும் அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியான டிரையரங்குகள் பல காற்று வாங்கி கொண்டிருக்கையில், 200 கோடி வசூல் என்பது அந்த படத்திற்கான விளம்பர யுக்திக்காக கூட அடிச்சு விடலாம் என்கின்றனர் சினிமா துறையினர்.