கல்வெட்டு என்ன சொல்கிறது… பொன்னியின் செல்வன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான சதி..

0
Follow on Google News

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியாகி திரையரங்கில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம், இதில் முதல் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகம் என்பதால், கதையில் மிக பெரிய விமர்சனம் வரவில்லை, ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் தான், கதையின் கரு என்பதால், அதில் மிக பெரிய குழப்பத்தை மணிரத்தினம் ஏற்படுத்தி விட்டார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் இன்று பொது தளத்தில் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் சோழர்களின பெருமைகளை உலக அறியச் செய்வதற்காக எழுதப்பட்ட நாவல் இல்லை. அது பொய்யான வரலாற்றை திரித்து கூறுவதற்காக திட்டமிட்டு எழுதப்பட்ட நாவல் என்கின்ற விமர்சனம் தற்பொழுது மேலோங்கி உள்ளது. மேலும் அதற்கான ஆதாரத்தையும் சுட்டி காட்டி வருகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

தற்போது உள்ள காட்டு மன்னார்குடி அதாவது இதற்கு முன்பு உடையார் குடி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் உள்ள ஒரு கல்வெட்டில் ஆதித்ய கரிகாலன் கொலை செய்த கொலைகாரர்கள் நான்கு பேர் அவர்கள் ராஜ துரோகிகள் என அந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர். மேலும் அந்த கல்வெட்டில் சோமன் இவன் தம்பி ரவி தாசன் ஆன பஞ்சவன் பிரமாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடி சோழ பிரமாதிராஜனும்.

இவர்கள் உடன் பிறந்த மலையனூரானும் ஸ்ரிமுகத்தின் மேற்பட்ட மலையனூறான் ஆன பாப்பனசேரி ரேவதாச கிராமவித்தனும் இந்த நால்வரும் ராஜ துரோகிகள், பாண்டியன் தலைக்கோய்த இளவரசரை கொலை செய்தவர்கள் என அந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறும் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்டு விட்டான்,

ஆனால் எப்படி கொலைசெய்யப்பட்டு விட்டான், ஒன்று பழுவேட்டையர்கள் சரி செய்து ஆதித்ய கரிகாலன் கொலை செய்திருக்கலாம், இல்லையென்றால் சம்புவராயர்கள் போன்றோர் சதி செய்து கொலை செய்திருக்கலாம், அப்படி இல்லை என்றால் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் இடம்பெற்ற கற்பனை கதாபாத்திரமான நந்தினி சதி செய்து ஆதித்ய கரிகாலன் கொலை செய்திருக்கலாம்.

அப்படி இல்லை என்றால் ரவிதாசன் குழுவால் கொலை செய்யப்பட்டிருக்கலாம், அப்படி இல்லை என்றால் குந்தவையும் ராஜராஜ சோழனும் சதி செய்து வந்தியத்தேவன் மூலம் ஆதித்ய கரிகாலன் கொலை செய்திருக்கலாம் என ஆதித்திய கரிகாலன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்றே தெரியவில்லை என்று மிகப் பெரிய ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் நாவலை முடித்து இருப்பார்

ஆதித்ய கரிகாலன் கொலை செய்த அந்த நான்கு நபர்களையும் மறைத்து மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே கல்கியால் பொன்னியின் செல்வன் நாவல் எழுதப்பட்டது என்றும் மேலும் ஒரு பொய்யை மேலும் உண்மையாகும் முயற்சியில் ஆதித்யா கரிகாலன் கொலை செய்த அந்த நான்கு நபர்களும் சோழ நாட்டைச் சார்ந்தவர்களே அல்ல அவர்கள் பாண்டிய நாட்டினர் என்று கல்கி தன்னுடைய நாவலில் வெளிப்படுத்தி இருப்பார்.

இவ்வாறு உலக தமிழர்கள் கொண்டாட படும் சோழ மன்னர்களின் பெருமையை எடுத்துரைப்பதற்காக கல்கி பொன்னியின் செல்வன் நாவலை எழுதவில்லை, ஆதித்த கரிகாலனை கொலை செய்த்தவர்களை யார் என்பதை திட்டமிட்டு மறைப்பதற்காகவும், மேலும் சோழ மன்னர்களின் வரலாற்றில் குழப்பம் அடைய செய்வதற்காகவே கல்கி திட்டமிட்டு பொன்னியின் செல்வன் நாவலை எழுதியதாகவும், கல்கியின் சொன்ன பொய்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் தான் மணிரத்தினதின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைத்துள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.