மணிரத்தினம் எதிர்ப்பபை மீறி.. PS 2 ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு வந்தது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான பொழுது அந்தப் படத்தை தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு கொடுக்க படத்தின் தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் கொடுப்பதற்கு முன் வந்த போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம்.

இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தாலும், அந்த படத்தில் இயக்குனராக மணிரத்தினம் ஒப்பந்தமாகும் பொழுது. அந்தப் படத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்கென ஒரு குறிப்பிட்ட சதவீதம் பங்கு வேண்டும் என்கின்ற ஒப்பந்தத்திலேயே அந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளார் மணிரத்தினம்.

அந்த வகையில் தயாரிப்பாளர் பொன்னியின் செல்வன் படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிக்கு கொடுக்க முன் வந்தாலும், இயக்குனர் மணிரத்தினம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பணம் கொடுத்து எந்த படத்தையும் வாங்கி வெளியிட மாட்டார்கள்.

ரெட் ஜெயன் ட்ஸ் எந்த ஒரு பணமும் கொடுக்காமல் திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் அவங்க பேனரில் வெளியிடுவார்கள். அதில் வரும் பணத்தில் அவர்களுக்கான கமிஷனை எடுத்துவிட்டு தயாரிப்பாளர்களிடம் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விடுவார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை காசு கொடுத்து வாங்கி தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கையில். அந்த பணத்திலே நாம் பெரும் லாபத்தை பெற்று விடலாம்,

அப்படியிருக்கையில், எதற்காக ரெட் ஜென்ஸ் மோவிஸுக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டும் என்று மணிரத்தினம் லைக்கா நிறுவனத்திடம் மிகப் பெரிய ஒரு வாக்குவாதமே செய்ததாக அப்போது கூறப்பட்டது. இருந்தும் ரெட் ஜெயன்ஸ் மூவிஸ் கடைசி வரையும் பொன்னியின் செல்வன் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு போராடினார்கள். ஆனால் இறுதி வரை மணிரத்தினம் ஒத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு கட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு சிரமங்களை மேற்கொண்டதை அடுத்து லைக்கா நிறுவனம் ஒரு கட்டத்தில் மணிரத்தினத்தை ஆப் செய்து விட்டு, ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் அவர்களின் மேற்பார்வையிலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்தார்கள். இதில் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் பெயரில் இடம் பெறவில்லை என்றாலும் ரெட் ஜெயன்ட்ஸ் தலைமை நிர்வாகியான செண்பகமூர்த்தி மூலமாகவே பொன்னியின் செல்வன் படம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து மேலும் பெரும் லாபத்தை ஈட்டு தந்தது, இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரெட் ஜெயன்ட்ஸ் செண்பகமூர்த்தி என்பது லைக்கா நிறுவனத்திற்கும் மணிரத்தினத்திற்கும் தெரியவந்தது. அந்த வகையில் ரெட் ஜெயன்ட்ஸ் தயவு இல்லாமல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிட்டு இருந்தால் இந்த அளவுக்கு லாபத்தை பெற்றிருக்க முடியாது என்கின்ற ஒரு நிதர்சனத்தை புரிந்து கொண்ட மணிரத்தினம்.

அதன் பின்பு ரெட் ஜெயன்ட்ஸ் உடன் தன்னுடைய நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு கமல்ஹாசன் நடிப்பில் ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பில் புதிய பத்ம ஒன்றில் கமிட்டானார், மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் வெளியிடுவதற்கு முன் வந்த போது இம்முறை மணிரத்தினம் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கமால் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார் மணிரத்தினம்.

இதன் பின்னரே தற்பொழுது ரெட் ஜெயன்ட்ஸ் லோகோ உடன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று அந்த படம் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் இதே போன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது ரெட் ஜெயன்ட்ஸ் மூவீஸ் லோகோ எந்த ஒரு போஸ்டரிலும் இடம் பெறவில்லை, இருந்தாலும் கடைசி நேரத்தில் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் உதவியுடனே பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானது.

இந்த நிலையில் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சரான பின்பு அந்த ரெட் ஜெயன்ட்ஸ் இயக்குனர் பதவியை ரீசைன் செய்து விட்டதாகவும். அதனால் தற்பொழுது அவர் அவரது மனைவி ரெட் ஜெயன்ட்ஸ் இயக்குனராக நியமிக்க பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த அந்த வகையில் பொன்னின் செல்வன் 2 படத்தை வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் இது தொடர்பான முக்கிய கோப்புகளில் அவரது மனைவி தான் கையெழுத்திட்டுருப்பார் என்றும் கூறப்படுகிறது.