நான் இப்போது சிங்கிள் தான்.. அவர் என் கணவர் இல்லை.. புது குண்டை தூக்கி போட்ட வனிதா..

0
Follow on Google News

பல்வேறு சர்ச்சைக்கு இடையே கடந்த ஆண்டு நடிகை வனிதா, விஷூவல் எபெஃப்ட் இஞ்சினியரான பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். தன்னை முறையாக விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக பீட்டர் பால் மீது, அவரது முதல் மனைவி புகாரளித்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதல் மனைவிக்காக நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் குரல் கொடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இப்படி வனிதாவின் மூன்றாவது திருமணம் செய்துகொண்டது பற்றி சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்தனர். இருந்தும் திருமணத்திற்கு பின் வனிதா – பீட்டர் பால் புதுமண தம்பதியர்கள் சந்தோசமாக குடுமபத்துடன் கோவா சென்றார்.

கோவா சுற்றுலா சென்ற நிலையில், அங்கே குடிபோதையில் இருந்த பீட்டர் பால் சர்ச்சைக்குரிய வகையில் வனிதாவை பேசியதாகவும் இதனால் வனிதா- பீட்டர் பால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சென்னை திரும்பியதாக அப்போது செய்திகள் வெளியானது. கோவாவில் இருந்து திரும்பியதில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது,

ஒருகட்டத்தில் சம்பவம் நடந்த அன்று குடி போதையில் இருந்த பீட்டர் பால் – வனிதா இருவருக்கு இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட பீட்டர் பாலை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் வனிதா. இதனை தொடர்ந்து திருமணம் நடந்து சில மாதங்களில் இந்த தம்பதியினர் பிரிந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்த செய்தி பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நடிகை வனிதாவின் 3-வது கணவர் உயிரிழந்தார் என்ற செய்தி பரவி வைரலானது. இதனையடுத்து தற்போது மறைந்த பீட்டர் பாலுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020 இல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை. எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை.

நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் உரிமை உண்டு என வனிதா விஜயகுமார் தெரிவித்துளளார்.