கப்பலூர் டோல் கேட் ஊழியர் மீது காரை விட்டு மோதும் சிசிடிவி காட்சி வைரல்… பிரச்சனைக்குறிய கப்பலூர் டோல் அகற்றப்படுமா.?

0
Follow on Google News

மதுரை கப்பலூர் சுங்கச் சாவடி சுற்றியுள்ள திருமங்கலம், உச்சபட்டி, கூத்தியார்குண்டு, என அருகில் உள்ள உள்ளூர் வாகனங்கள் மற்றும் கப்பலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லகூடிய வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் இதற்கு எதிராக கடையடைப்பு உட்பட பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் எந்த ஒரு ப்ரெஜனம் இல்லை.

சுங்கை சாவடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் அருகில் உள்ள கூத்தியார்குண்டு, தோப்பூர் போன்ற பகுதிகளில் உள்ளவர்கள் திருமங்கலம் செல்ல வேண்டும் என்றால் கப்பலூர் சுங்கை சாவடியை கடந்து செல்ல வேண்டும், சுங்கை சாவடியில் இருந்து திருமங்கலம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே, ஆனால் ஒவ்வொரு முறையும் திருமங்கலம் சென்று திரும்ப அந்த பகுதி வாகன ஓட்டிகள் சுமார் 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

அதாவது திருமங்கலம் காய்கறி மார்க்கெட் சென்று 300 ரூபாய்க்கு காய்கறி வாங்க 150 ரூபாய் சுங்கை கட்டணம் செலுத்தும் நிலையில் அந்த பகுதி வாகன ஓட்டிகள் உள்ளனர். உள்ளூர் வாகனம் என்று அடையாள அட்டையை காண்பித்தால் கூட, சுங்கை சாவடி ஊழியர்கள் கட்டணமின்றி உள்ளூர் வாகனத்தை அனுமதிப்பதில்லை, மேலும் வாகன ஓட்டிகளிடம் மரியாதை குறைவாக சுங்க சாவடி ஊழியர்கள் நடந்து கொள்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட, கப்பலூர் சுங்கை சாவடியை அகற்ற வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர், அந்த அளவுக்கு கப்பலூர் சுங்கை சாவடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அந்த சுங்கை சாவடியை சுற்றி இருக்கும் வாகன ஓட்டிகள்.

கடந்த வருடம் சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் பிரபு கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொழுது மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் எடுத்தும் நீண்ட நேரமாக காரை நிறுத்தி வைத்திருந்ததால் ஏற்பட்ட தகராறில் சுங்கை சாவடி ஊழியர்கள் பிரபு என்பவரை தாக்கிய சம்பவம் கூட செய்தியாக வெளியானது, இவ்வாறு அடாவடியிலும் கப்பலூர் சுங்கை சாவடி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் உண்டு.

இந்நிலையில் தற்பொழுது கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடுப்பான வாகன உரிமையாளர் ஒருவர், கட்டணம் செலுத்தாமல் காரை எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர், கார் முன்பாக பிளாஸ்டிக் தடுப்பணையை வைத்து தடுத்து நின்று கட்டணத்தை செலுத்தி விட்டுச் செல்லும்படி தெரிவித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், அந்த ஊழியர் மீது காரை விட்டு மோதியுள்ளார், இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஊழியரை, சக ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, காவல்துறையிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பிரச்சனைக்குள் உள்ளாகி வரும் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றிலுமாக அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது தான் ஒரே வழி என தெரிவித்து வருகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here