டோனிக்கு ஒரு நியாயம்.? மற்ற வீரர்களுக்கு ஒரு நியாயமா.? இது விதிமுறைக்கு எதிரானது…. டோனிக்கு விளையாட வாய்ப்பே கொடுத்து இருக்க கூடாது…

0
Follow on Google News

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ருத்ராஜ் கெயிக்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனி அதே அணியில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு வெற்றி ஐந்து தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ருத்ராஜ் கேப்டன்சியிலான சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இப்படியான நிலையில் கடந்த மே ஐந்தாம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் இடையே 53வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது தோனி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது, தோனி டேரல் மிச்சலுக்கு சிங்கிள் ஓடாமல் நின்று கொண்டிருந்தார். இது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் , தோனியின் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனாலேயே அவர் ரன் ஓடாமல் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி இந்த ஐபிஎல் சீசன் உடன் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தோனியும் இந்த சீசனில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேட்ஸ்மேன் ஆக விளையாடி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இந்த சீசன் முழுவதும் கடைசி வரிசையில் தான் தோனி களம் இறங்குகிறார்.

இந்த சீசன் முழுவதும் தோனி அவரது ரசிகர்களுக்காகவே விளையாடி வருவதாக சொல்லப்படுகிறது. அதனாலயே அவர் காலில் காயம் ஏற்பட்டு நூறு சதவீதம் உடல் தகுதியுடன் இல்லாத போதிலும் போட்டியில் விளையாடுவதாகவும் கூறுகின்றனர். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், தோனி காலில் காயத்துடன் விளையாடுவது உண்மையில் சரியானதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்ட போதிலும் தோனி விளையாடியது தற்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது போட்டியில் விளையாடுவதற்கு 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த கிரிக்கெட் வீரரால் பிளேயிங் லெவனில் விளையாட முடியாது. கடந்த காலங்களில் சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் விளையாடுவதற்காக காயங்களை மறைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் காயங்களை மறைத்து விளையாடுவது குறித்து தோனியே ஒருமுறை கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தோணி இதற்கு மும்பு பேசுகையில், நான் போட்டியில் விளையாடுவதற்கு 100% உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் இல்லை எனில் விளையாட மாட்டேன். அது அணிக்கும் ரசிகர்களுக்கும் செய்யும் துரோகம். அது மட்டும் இல்லாமல், வேறொரு வீரருக்கு கிடைக்கும் வாய்ப்பையும் நான் தட்டிப் பறிக்கிறேன்.

எனவே நான் 100 சதவீதம் உடற்குதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் இல்லையெனில் விலகி விடுவேன்” என்று கூறியிருந்தார். இவ்வாறெல்லாம் பேசியிருந்த தோனியே, தற்போது காலில் காயம் ஏற்பட்டும் போட்டியில் விளையாடி வருகிறார். இதனால் தோனியால் களத்தில் 100% பேட்ஸ்மேன் ஆக செயல்பட முடியவில்லை. முக்கியமான நேரத்தில் ரன் எடுக்க முடியவில்லை. ஒரு கிரிக்கெட் வீரர் காயம் அடைந்து விட்டால் போட்டியிலிருந்து விலகுவது தான் சரியாக இருக்கும். விதி என்பது அனைவருக்கும் ஒன்றுதானே? தோனிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல். தோனி செய்தது பல்வேறு தரப்பினர் தோனிக்கு எதிராக தாறுமாறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன ர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here