பொன்னியின் செல்வனுக்கு எதிராக களம் இறங்கிய உதயநிதி… அதிர்ச்சியில் மணிரத்தினம்.. என்ன தெரியுமா.?

0
Follow on Google News

சோழ மன்னர்களின் கதையை மையமாகக் கொண்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மிக அதிக பணச்செலவில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடித்துள்ளார் மணிரத்தினம். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை, இருந்தாலும் பல நட்சத்திர நடிகர்கள் , நடிகைகள் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆரம்பத்தில் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது, ஆனால் சமீப காலமாக நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் காரணமாக மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் அதே காலகட்டத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படமும் வெளியாகும் என தகவல் வெளியானது.

இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கான வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கின்ற ஒரு அச்சம் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இருந்து வந்தது. இந்த நிலையில பொன்னியின் செல்வன் தமிழ்நாடு விநியோக உரிமை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் போஸ்டர்களில் ரெட் ஜெயின் லோகோ இடம்பெற்றது.

பொன்னியின் செல்வன் படத்தில் உதயநிதி என்ட்ரி கொடுத்த பின்பு, நானே வருவேன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்க முடிவு செய்தார் அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு. ஆனால் உதயநிதி ஸ்டாலின் பொன்னியின் செல்வன் படத்தின் உள்ளே வந்தது மணிரத்தினத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் மணிரத்தினத்தின் அழுத்தத்தின் காரணமாக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்ற ஒரு தகவல் பரவியது. ஆனால் முதல்வர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேற்றியது தான், முதல்வர் மு க ஸ்டாலின் பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது நானே வருவேன் படத்தின் தமிழ்நாட்டின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ரெட் ஜெயன்ட் மூவி தமிழ்நாடு முழுவதும் நானே ஒருவன் படத்தை பொன்னியின் செல்வன் வெளியாகும் அதே காலகட்டத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் பொன்னியின் செல்வன் படத்தின் படம் விற்பனை முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் பொன்னின் செல்வன் படத்தை வாங்க திரையரங்குகள் வாங்க முன் வரவில்லை, இதனால் பொன்னியின் செல்வன் வியாபாரத்தில் மிக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் நானே ஒருவன் படத்தின் வியாபாரம் படு ஜோராக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து உதயநிதியை வெளியேற்றியது, மணிரத்தினம் செய்த மிகப்பெரிய தவறு. அதனால் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்திற்குஎதிராக நானே வருவேன் படத்தை களம் இறக்கி மணிரத்தினத்திற்கு தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் என்று கூறப்படுவது குறிப்பிடதக்கது.