தொலைந்தது சனியன்… செம்ம ஜாலி மூடில் பாலா..! மனைவி பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?

0

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்துள்ளனர்,இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தாலும், கடந்த நான்கு வருடங்களாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து தான் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கடந்த நான்கு வருடமாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் பாலா என்று கூறப்படுகிறது.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த பாலா முதல் படமான சேது படம் மிக பெரிய ஹிட் கொடுத்தும் ஒரே படத்தில் ஓஹோ என்று உச்சத்துக்கு சென்றார், அதனை தொடர்ந்து, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டும் கொடுத்து விருதுகளை அள்ளி குவித்து வந்த இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளி என்கிற அங்கீகாரம் கிடைத்தது.

ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. நடிகர்கள், விக்ரம் , சூர்யா , ஆர்யா , விஷால், அதர்வா போன்ற நடிகர்களின் நடிப்பு திறமையை வெளி கொண்டு வந்தவர் பாலா, அதில் விக்ரம், சூர்யா ஆகிய இருவரும் பாலா இல்லை என்றால் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி தனது படைப்புகளால் பலர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய இயக்குனர் பாலா தங்களுடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வருவார் என தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற படங்களில் நடித்த நடிகர்கள் சசிகுமார், GV பிரகாஷ், துருவ் விக்கரம் ஆகியோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது, இதில் தனது வாழ்க்கையில் எப்படி பாலா மாற்றத்தை கொண்டு வந்தாரோ, அதே போன்று தனது மகன் துருவ் விக்ரம் சினிமா வாழ்க்கையிலும் பாலா மாற்றத்தை கொண்டு வருவார் என எதிரிபார்த்த நடிகர் விக்ரம் கனவை பாலாவால் நிறைவேற்ற முடியவில்லை.

பாலாவின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அவரது மனைவிக்கு அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பாலா சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த முடியுமால் போனது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பாலா தனது மனைவி தடம் மாறி தவறான பாதையில் செல்வதாக அறிந்த ஆரம்ப கட்டத்திலே அவரை விவகாரத்து செய்து விட முடிவு செய்துள்ளார்.

ஆனால் சில அரசியல் பிரச்சனை காரணமாக அமைதியாக இருந்துள்ளார், தற்பொழுது மனைவி சட்டப்படி விவாகரத்து பெற்று சேது படத்தின் படப்பிடிப்பில் எந்த மனநிலையில் இருந்தாரோ, அதே மனநிலையில் தற்பொழுது கவலைகளை மறந்து செம்ம ஜாலி மூடில் தனது முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பியுள்ள பாலா, தற்பொழுது நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பாலாவுக்கு நெருக்கமானவர்கள் சிலர் மனைவியை விட்டு பிரிந்த பாலாவுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் பேச, ஆனால் பாலா ஒரே வார்த்தையில் தொலைந்தது சனியன் என மனைவி விவாகரத்து குறித்து பேசி, எந்த ஒரு டென்ஷன் இல்லாமல், செம்ம ஜாலி மூடில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது சூர்யா நடிப்பில் நடந்தும் வரும் படப்பிடிப்பு இயக்குனர் பாலாவுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்து பாலாவுக்கு சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் என கூறப்படுகிறது.

சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?