பயில்வான் சாதாரண ஆள் இல்லை… அச்சத்தில் பின் வாங்கிய நடிகர் சங்கம்..! என்ன நடந்தது தெரியுமா.?

0

பிரபல பத்திரிகையாளர் , சினிமா நடிகர் பயில்வான் ரங்கநாதன், இவர் நீண்ட வருடமாக சினிமா துறையில் இருந்து வருவதால். சினிமா தொடர்பான அந்தரங்க விஷயங்கள் பல அறிந்தவர், அந்த வகையில் கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை யாராவது தங்களுக்கு சாதகமாக மாற்றி தெரிவிக்க முயன்றால், அப்போது என்ன நடந்தது என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்து விடுவார் பயில்வான் ரங்கநாதன் என்கிற பாராட்டும் அவருக்கு உண்டு.

அதே நேரத்தில் சினிமா நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிடும் கிசு கிசுக்கள் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது. இவர் வெளியிடும் கிசு கிசு தகவலில் சிக்காத நடிகர், நடிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு அனைவரின் அந்தரங்க விஷயம் குறித்து பாரபட்சம் இல்லாமல் வெளிச்சம் போட்டு காண்பித்து வருகின்றவர் பயில்வான் ரங்கநாதன், யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து அவர் வேலையை செய்து வருகின்றவர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி, நடிகை ராதிகா, நடிகை ஓவியா ஆகியோர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் இருந்து கடும் எதிப்பு கிளம்பியது. நடிகை ராதிகா போது இடத்தில் நேரில் பார்த்த பயில்வான் ரங்கநாதனை அசிங்க ..அசிங்கமாக திட்ட, நான் பேசியது தவறு என்றால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என பயில்வான் தெரிவித்து விட்டார்.

இதே போன்று நடிகை கஸ்தூரி தான் மீது அவதூறாக பேசிய பயில்வான் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டல் விடுத்து பல நாட்கள் கடந்து சென்ற நிலையில், இதுவரை பயில்வான் மீது கஸ்தூரி எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை, ஆனால் எந்த ஒரு மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து நடிகர் , நடிகைகள் பற்றிய கிசு கிசு செய்திகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறார் பயில்வான், இந்நிலையில் தற்பொழுது புதியதாக நடிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.

இவர்களிடம் பயில்வனுக்கு முடிவு கட்ட எதாவது செய்ய வேண்டும் என பலர் முறையிட்டதாக கூறப்படுகிறது, மேலும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட பயில்வான் ரங்கநாதனை எச்சரிக்கும் விதத்தில் அமைத்திருந்தது நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டிகள். ஆனால் இதுவரை பயில்வான் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று பயில்வானை எதாவது செய்ய வேண்டும் என துடிக்கும் நடிகர், நடிகைகள் கூட யாரும் தனிப்பட்ட முறையில் புகார் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

பயில்வான் குறித்து யாராவது முன் வந்து புகார் கொடுத்தால், மேலும் சம்பந்தப்பட்ட அந்த நடிகர், நடிகைகள் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவார் என்பதால் எதற்கு இந்த வம்பு என கண்டுகொள்ளாமல் நடிகர், நடிகைகள் கடந்து செல்வதாக கூறப்படுகிறது, மேலும் பயில்வான் ரங்கநாதன் சாதாரண ஆள் கிடையாது, சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றி பல ரகசியங்களை தெரிந்தவர், அதனால் நடிகர் சங்கம் உட்பட சினிமா துறையினர் அனைவரும் பயில்வான் ரங்கநாதன் விவகாரத்தில் பின் வாங்கி விடுவார்கள் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அந்த விஷயத்தில் தனுஷை விட மோசம் ரஜினி..! மதுபோதையில் நட்சத்திர ஓட்டலில் மனைவியிடம் சிக்கிய ரஜினி..!