பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்…பண பிரச்சனையை தீர்க்க எடுத்த முடிவு…! சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளுக்கு இல்லாத பெரிய வரவேற்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது, இந்த நிகழ்ச்சி கலாசார சீர்கேடு என்கிற எதிர்மறை விமர்சனம் இருந்தாலும், மேலும் இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் கடும் சர்ச்சையாக உருவெடுத்து வந்தாலும், இது அனைத்தும் அந்த நிகழ்ச்சிக்கு மேலும் விளம்பரத்தை தான் பெற்று தந்துள்ளது.

இப்படி இந்த நிகழ்ச்சியை பிடிக்காதவர்கள் கூட விமர்சனம் செய்வதற்காகவாது பார்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்காக, நடிகர் கமலஹாசனுக்கு ரூபாய் 100 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் சங்கம் தேர்தல் முடிவுகள் வெளியானது, மீண்டும் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது நடிகர் சங்கத்தில் மிக முக்கிய கடமையாக நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட வேண்டும் என்பதாகும். இந்த கட்டிடம் கட்டி முடிப்பதற்கு மேலும் சுமார் 25 முதல் 30 கோடி வரை தேவை படும் என்கின்றனர், அந்த வகையில் மீண்டும் கௌரவ பிச்சை எடுத்தாவது கட்டிடம் காட்டுவோம் என நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார், ஆனால் இவர்கள் பிச்சை கேட்டால் மக்கள் போடமாட்டர்கள் என்பது கடந்த கால முடிவுகள் தெளிவு படுத்தியது.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதர்க்கு கடந்த முறை கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் என நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை மக்கள் புறக்கணித்தனர்,நீங்க கட்டிடம் கட்டுவதற்கு நாங்க ஏன் பணம் தரவேண்டும் என மக்கள் விழித்து கொண்டதின் விளைவு நடிகர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி தோல்வியை தழுவியது. அப்போது மக்களிடம் ஏன் பணம் கேட்க வேண்டும் நாமளே நிதி கொடுத்து கட்டிடம் கட்டலாம் என நடிகர் அஜித் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு என்ன செய்யலாம் என நடிகர் சங்க நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் , பிக் பாஸ் நிகழ்ச்சியை 100 நாட்கள் இல்லாமல், 10 நாள் நிகழ்ச்சியாக முக்கிய நடிகர் நடிகைகள் பிக் பாஸ் வீட்டில் பங்கேற்று, அந்த பத்து நாள் நிகழ்ச்சியை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினால், அதில் கிடைக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளமே நமக்கு தேவைக்கு அதிகமாக கிடைக்கும்.

அந்த பணத்தை வைத்து நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டி முடித்து விடலாம். நடிகர் சங்கத்தின் பண பிரச்சனையை தீர்க்க இது தான் சரியான முடிவு என ஒரு திட்டமும் ஆலோசனையின் போது நடைபெற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உட்பட மற்ற நடிகர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்பது சந்தேகம் தான் என்பதால், இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவது நடிகர் சங்கத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?