அதே நாளில்..அதே நேரத்தில்…ஐஸ்வர்யாவை ஓட..ஓட விரட்ட தனுஷ் சபதம்.! என்ன சம்பவம் தெரியுமா.?

0

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை முடிவு கொண்டு வந்து இருவரும் பிரிவதாக அறிவித்து, நிரந்தரமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பிரிவுக்கு பின் அவரவர் தங்களின் சினிமா தொழிலில் பிசியாக இருந்து வருகின்றனர். இருவரும் பிரிவதாக அறிவித்த போது கூட, ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில், தனி தனி அறையில் தங்கி அங்கே நடந்த அவரவர் சினிமா பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரித்து தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிட்டார் ஐஸ்வர்யா, இந்த மியூசிக் ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டார், அதே போன்று பிற மொழிகளில் அந்த மொழியை சார்ந்த சினிமா பிரபலங்கள் வெளியிட்டனர், ஐஸ்வர்யா படைப்பில் வெளியான மியூசிக் ஆல்பத்தை பார்த்தவர்கள், இதற்கு தான் இந்த பில்டப்பா.? என்று கருத்து தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது மியூசிக் ஆல்பம்.

மியூசிக் ஆல்பத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா, தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கும் ஐஸ்வர்யா, அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் மற்றும் அணைத்து வேலைகளிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், அதே போன்று இந்தியிலும் ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா ரெம்ப பிசியாக வேலை பார்த்து வருகிறார்.

மறுபக்கம் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் படம் படு தோல்வி அடைந்துள்ளது, மேலும் அடுத்தது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. கைவசம் சொல்லும்படி ஏதும் படம் இல்லை. இந்த சூழலில், தனுஷ் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார், அதற்கான இயக்குனரை தேடி கொண்டிருக்கும் தனுஷ், ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையாமல் தவித்து வருகிறார்.

மேலும் ஐஸ்வர்யா தரப்பில் இருந்து சினிமாவில் கடும் நெருக்கடியை தனுஷுக்கு கொடுத்து வருகின்றனர். இதனால் பொறுமை இழந்து மனைவி ஐஸ்வர்யாவை நேரடியாக மோதுவதற்கு முடிவு செய்துள்ளார். தனுஷ் ஏற்கனவே பா பாண்டி என்கிற படத்தை இயக்கியுள்ளார், மேலும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனர் பெயர் மற்றும் அந்த படத்தின் கேமரா மேன் பெயர் இடம் பெற்றிருந்தாலும், முழுக்க முழுக்க அந்த படத்தை இயக்கியது தனுஷ் தான் என்பது சினிமா வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் மனைவி ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ், நகைச்சுவை கலந்த சிறிய பட்ஜெட்டில் படம் ஒன்றை இயக்க உள்ளார், அதில் ரோபோ சங்கர் மற்றும் விஜய் டிவி ராமர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் எந்த தேதியில் அவருடைய படம் வெளியாக இருக்கிறதோ, அதே தேதியில் தான் தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தை வெளியிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் மனைவி ஐஸ்வர்யா படத்துக்கு போட்டியாக தன்னுடைய படத்தை வெளியிட்டு, ஐஸ்வர்யா படத்தை மண்ணை கவ்வ விட்டு அந்த படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யாவை ஓட…ஓட…விரட்டாமல் விடமாட்டேன் என சபதம் செய்துள்ள தனுஷ். விரைவில் அவருடைய இயக்கத்தில் தொடங்க இருக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

சொந்த தம்பி முதுகில் குத்திய இளையராஜா.. ஆணவத்தால் அழியும் இளையராஜாவை யார் காப்பாற்றுவது.?