உன்னை திருத்தவே முடியாது….தனுஷ் வீட்டில் வெடித்தது சர்ச்சை.. விவாகரத்துக்கு தயாரான ஐஸ்வர்யா..

0
Follow on Google News

பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெற்று, நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் திருமணமான தொடக்கத்தில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார்.

இவர் நடித்து வெளியான ஆடுகளம் படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது, இந்த படத்துக்கு தனுஷ் தேசிய விருது பெற்றார். இதற்கு பின்பு அடுத்த கட்டத்துக்கு போன நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் திரைப்படத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்துக்கு வந்தார், இதனை தொடர்ந்து சில படங்கள் நடித்த தனுஷ் அவருடைய மனைவி இயக்கத்தில் 3 படத்தில் நடித்த போது சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் பின்பு தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ், நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது, இதில் நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டார் தனுஷ், மேலும் இரவு பார்ட்டிகளில் அவர் நடிகைகளுடன் பங்கு பெரும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், நான் அபப்டியெல்லாம் இல்லை, இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராது என சமாதனம் செய்து விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார், இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் நஐஸ்வர்யா அதிரடி முடிவுகளை எடுத்து தனுஷ் இனி தப்பிக்க முடியாதவாறு அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

அதில் இனி சென்னை தவிர்த்து வெளியில் எங்கே படப்பிடிப்புக்கு சென்றாலும் அவருடனே கூட செல்வது, இரவு பார்ட்டிகளுக்கு கணவன் உடன் செல்வது, குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவரும் கலந்து கொள்வது என முடிவு செய்து,இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடுவதாக தனுஷை எச்சரித்து, அதன்படி சமீப காலமாக செயல்பட்டு வருகிறார், இதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் இரவு பார்ட்டிகளில் மனைவி உடன் தனுஷ் பாடல் பாடியது, மேலும் மனைவியுடன் பல இடங்களில் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகியது என கூறபடுகிறது.

மேலும் தற்போது ஹாலிவூட் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் படம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுவதால், குடும்பத்துடன் படப்பிடிப்பு முடியும் வரை ஸ்பெயினில் கணவனுடன் ஐஸ்வர்யா குடியிருக்க போவதாக கூறப்படுகிறது, ஐஸ்வர்யா இந்த அதிரடி முடுவுகளை கேள்விப்பட்ட சினிமா துறையை சேர்ந்தவர்கள் இந்த முடிவை சில வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா எடுத்திருந்தால், அவருடை கணவர் தனுஷால் சில குடும்பத்தில் விவாகரத்து நடைபெற்று இருக்காது என பேசப்படுவது குறிப்பிடதக்கது.