அவருடன் உங்கள் மகள்… வரலக்ஷ்மியின் ரகசியதை போட்டு கொடுத்த முக்கிய பிரமுகர்.! கோபத்தில் என்ன செய்தார் சரத்குமார் தெரியுமா.?

0

நடிகர் சரத்குமார் மூத்த மகள் வரலக்ஷ்மி லண்டனில் படித்து வந்தவர், போடா போடி திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார், இவர் நடித்த முதல் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, இதன் பின்பு சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் உடன் ஜோடி சேர்ந்து மதகஜராஜா திரைப்படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர், பின்னர் திருமணத்துக்கு முன்பே ஒன்றாக இவர்கள் ஒரே வீட்டில் இருப்பதாக பேசப்பட்டது.

ஏழு வருடங்களுக்கு மேல் போன இவர்கள் காதல், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக இருந்த நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர், இதன் பின்பு விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் மக்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பின் பாதியிலே அவர்கள் திருமணம் நின்றது, வரலக்ஷ்மி மறுபக்கம் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர், தமிழ், மலையாளம், கனடா, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருக்கும் போதே இரவு பார்ட்டியில் வரலக்ஷ்மி சக தோழிகள் த்ரிஷா போன்றோருடன் கலந்து கொண்டு வந்த புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி, தெலுங்கு பட உலகில் இருப்பவர்களிடம் நல்ல நட்பை ஏற்படுத்தி வருகிறார், இந்நிலையில் தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்களுடன் அடிக்கடி இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரே நபர் இல்லாமல் வேறுறொரு நபர் என தொடர்ந்து இரவு பார்ட்டிகளில் நடிகை வரலக்ஷ்மி பங்கேற்று வந்துள்ளார், இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா திரை உலகை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் கண்காணித்து வந்துள்ளார், உடனே நடிகர் சரத்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அந்த தெலுங்கு சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர், என்ன சார் உங்க மகள் இங்க கணக்கு வழக்கு இல்லாமல் இவர்கள் உடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என போட்டு கொடுத்துள்ளார்.

இதை கேட்ட சரத்குமார் உடனே கோபத்துடன், நான் சினிமா துறையில் இருக்கேன், எனது மகள் சினிமா துறையில் இருக்காங்க, எனக்கு தெரியும் இந்த துறையில் என்ன பிரச்சனைகள் இருக்கு என்று, என் மகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு, என் மகளின் உணர்வுகளை சக நடிகனாக என்னால் உணரமுடியும் என தனது மகளை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார் சரத்குமார் மேலும் போட்டு கொடுத்தவரிடன் அட்வைஸ் செய்து இது மாதிரி இனிமே நடந்து கொள்ள வேண்டாம் என சொன்னதாக கூறப்படுகிறது.