கவர்ச்சி குளியல் வீடியோ போட்ட பிக்பாஸ் பிரபலம்.!வறுத்தெடுத்த நெட்டிசன்களுக்கு என்ன பதிலடி கொடுத்தார் தெரியுமா.?

0
Follow on Google News

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாகவே பல்வேறு விளம்பரங்களில் மாடலாக தோன்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

எனினும் ரைஸாவை சினிமா ரசிகர்களுக்கு தெரிய வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக்பாஸ் முடிந்த கையோடு ரைஸாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஹரிஸ் கல்யாண் ஜோடியாக ரைஸா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் அவருக்கு ஹீரோயின் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து ரைஸா நடித்த வர்மா படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.

படங்களில் பிசியாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தன்னை எப்போதுமே பிசியாகவே வைத்திருக்கிறார் ரைஸா. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷுட் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் ரைஸாவை ஜொள்ளுவிடத் துவங்கினர். இது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் இப்படி நிக்கரோடவா சுத்துவீங்க என்று அந்த வீடியோவுக்கு எதிரான கமெண்டுகளும் குவியத் தொடங்கின. அதற்கு ரைஸா ரொம்பவும் கூலாக, நீச்சல் குளத்தில் நிக்கேரோட இல்லாம பிளேஸரும் பேண்ட்டுமா போடுவாங்கன்னு பதிலளித்துள்ளார். இந்த பதிலும் தற்போது ரொம்பவும் வைரலாகி உள்ளது.