விஜய் உடன் திரிஷா இருந்த ரகசிய புகைப்படம்… ஆமாம் நான் விஜயை காதலிக்கிறேன்… போட்டுடைத்த திரிஷா..

0
Follow on Google News

விஜய் – த்ரிஷா இருவரும், கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வந்த போது இருவருக்கும் இடையில் தொடர்ந்து கிசு கிசு செய்திகள் வெளியான நிலையில், குருவி படத்தின் வெளிநாடு படப்பிடிப்பின் போது விஜய் – திரிஷா இருவரும் பற்றி கிசு கிசு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விஜய் வீட்டில் அவருக்கும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையில் பிரச்சனை என்று கூட அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் பின்பு த்ரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டதின் காரணமாக, திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை விஜய் தவிர்த்தின் காரணமாக பல வருடங்களாக விஜய் – திரிஷா ஜோடி இனைந்து நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

மேலும் லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த திரிஷா, விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் வழங்கப்ட்டதும், இப்படி திரிஷாவுக்கு சம்பளம் அள்ளி கொடுத்ததில் பின்னணியில் விஜய் இருந்ததாகவும் தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு நார்வே நாட்டில் திரிஷா – விஜய் இருவரும் ஒன்றாக சுற்றி வந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

திரிஷா இருக்கும் நார்வே நாட்டில் விஜய்க்கு என்ன வேலை என்றும், அதே நேரத்தில் தற்பொழுது நார்வேயில் திரிஷாவுக்கு ஏதும் படப்பிடிப்பும் இல்லை, அப்படி இருக்கையில் ஒரே நாட்டில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக சுற்றி வந்தது விஜய் – திரிஷா இருவருக்கும் இடையிலான கிசு கிசு மேலும் அனல் பறந்தது. மேலும் லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் – திரிஷா உள்ளிட்ட பட குழுவினர் அனைவருமே, இரண்டு மாதம் அங்கேயே தங்கி படப்பிடிப்பை நடத்தினர்.

அப்போது விஜயுடன் த்ரிஷா உடன் வெளியிடங்களில் சுற்றுவது போல், எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது. மேலும் சமீப காலமாக விஜய் மனைவி சங்கீதா கணவர் விஜயை விட்டு பிரிந்து லண்டனில் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படும், நிலையில், இவர்களின் பிரிவுக்கு காரணம் நடிகை திரிஷா உடன் விஜய் கிசு கிசுவில் சிக்கி வருவது தான் என சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இப்படி ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போன்று தற்பொழுது திரிஷா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரிஷா, அவருடைய சமூக வலைதள பக்கத்தில், விஜய் உடன் தனியாக ஒரு லிப்ட்க்குள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரிஷா.

அந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவில் விஜயுடன் இருக்கும் புகைப்படம் உடன் சேர்த்து ஒரு பாடலையும் இணைத்துள்ளார், அந்த ஆங்கில பாடல் வரிகளில் தமிழ் அர்த்தம் என்னவென்றால், உங்களை இவ்வளவு காதலிப்பேன் என நான் நினைக்கவில்லை, இந்த உறவு பெரிதாக நீடிக்குமா என தெரியவில்லை. ஆனாலும் பேபி சாகும்வரை உங்களை நான் காதலிக்கிறேன் என அந்த ஆங்கில பாடலின் வரிகள் ஏற்கனவே விஜய்யும் திரிஷாவும் காதலித்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது இந்த பாடல் வரிகளை பதிவு செய்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள திரிஷாவின் இந்த செயல் மேலும் சர்ச்சையாக வெடித்துள்ளது.