பிரபல நடிகையுடன் நெருக்கம்…. மனைவிக்கு குட் பை… விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி…

0
Follow on Google News

அந்த காலத்தில் சினிமா துறையே இருக்கக்கூடியவர்கள் கணவன் மனைவி விவாகரத்து பெறுகிறார்கள் என்றால் அது பெரிய விஷயமாக பரபரப்பாக பேசப்படாது. இன்னும் சொல்லப்போனால் பல நடிகர் நடிகைகளின் கணவன் மனைவிகள் யார் யார் என்று கூட அன்றைய சினிமா ரசிகர்களுக்கு தெரியாது. காரணம் இன்று இருப்பது போல் அன்று சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் இல்லை.

அந்த வகையில் சினிமா நடிகர் நடிகைகள் குடும்பப் பின்னணி என்று ஆராய்ந்து பார்க்கக்கூடிய காலகட்டத்தில் அன்றைய சினிமா ரசிகர்கள் இல்லை. ஆனால் தற்போது அப்படி அல்ல, சினிமா நடிகர் நடிகையர் குறித்து ஏ டு இஸட் அவர்கள் கடந்து வந்த பாதைகள், அவர்கள் குறித்த கிசுகிசு, அவர்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் என்ன.? என்று மூடி மூடி வைத்தாலும் ஏதோ ஒரு வகையில் சமூக வலைதளம் வழியாகவோ, பத்திரிகையாளர்கள் மூலமாகவோ மீடியாவுக்கு வந்து விடுகிறது.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வரும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சினிமா துறையை சார்ந்தவர்கள் விவாகரத்து செய்கிறார்கள் என்றால்,பின்னணியில் ஏதோ ஒரு வகையில் கிசுகிசுக்கள் இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த விவகாரத்தில், இசையமைப்பாளர் டி இமான் மற்றும் அவருடைய மனைவிக்கு விவாகரத்து பின்னணியில் கூட சிவகார்த்திகேயன் குறித்த கிசுகிசுகள் மிக பெரிய அளவில் பூதகமாக வெடித்தது. அதேபோன்று நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய இருப்பதன் பின்னணியில் ஒரு நடிகை மட்டுமல்ல பல நடிகைகளுடன் கிசுகிசுகள் வெளியானது.

அதே போன்று, ஜிவி பிரகாஷ் அவருடைய மாமியார் கடும் கண்டிஷன் போடுவதாலும், மேலும் ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை அவருடைய மனைவி அபகரித்துக் கொள்வதாகவும், அதனால் ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவி சைந்தவி விகாரத்தை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய இருப்பதாக தன்னுடைய வழக்கறிஞர் மூலம் அப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்,

இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பொதுவாக சினிமா துறையில் இருக்கக்கூடிய நடிகர்கள், அவர்கள் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளுடன் நடிக்கும் பட காட்சிகள் படமாக்குவதற்கு முன்பே அந்த நடிகையுடன் நெருங்கி பழகிக் கொள்வார்கள், காரணம் அப்போதுதான் அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படும் போது அவர்களுக்குள் இடையில் இருக்க கெமிஸ்ட்ரி திரையில் ஒர்க் அவுட் ஆகும்.

அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு நடிகையுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது, அந்த நெருக்கம் நாளடைவில் இவர்களுக்குள் நல்ல ஒரு நட்பாக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்து கொள்ளலாம் என்கின்ற முடிவெடுத்து நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் விவாகரத்து அப்ளை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவருடைய மனைவி ஆரத்தி தன்னுடைய கணவருடன் இணைந்து வாழவே விரும்பதாகவும், அதனால் அவர் விவாகரத்துச் செய்ய விரும்பவில்லை என கூறப்படுகிறது.

ஜெயம் ரவி விவாகரத்து விவகாரம் இன்னும் சில நாட்களில் அவருடைய வழக்கறிஞர்கள் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வரலாம் என்றும், அதே நேரத்தில் விவாரத்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் ஒரு வருடம் கணவன் மனைவிக்கு கால அவகாசம் கொடுக்கப்படும், அந்த வகையில் இந்த ஒரு வருடத்திற்குள் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆரத்தி இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் இணைந்து வாழ்வார்களா.? அல்லது ஜெயம் ரவி விடாப்பிடியாக மனைவியை வாரத்து செய்வாரா.? என்கிற விவாதம் சினிமா வட்டாரத்தில் அனல் பறந்து வருகிறது.