பயில்வான் மகள் பற்றிய கிசு கிசு… ஷகிலா சொன்ன ஷாக்… பயில்வானுக்கே இந்த நிலையா.?

0
Follow on Google News

சினிமா விமர்சகரும், பத்திரிக்கையாளருமான பயல்வான் ரங்கநாதனுக்கும், நடிகை ஷகிலாவிற்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும், மாறி மாறி சண்டைகளும், வார்த்தை போர்களும் சமீப காலமாகவே அதிகரித்து, சோசியல் மீடியாவே பரபரப்பாக தான் இருக்கிறது. இந்நிலையில், அனைத்து நடிகர், நடிகைகளையும் அசால்ட்டாக விமர்சித்து, எப்போதும் கிசுகிசுப்புகள், கள்ளத்தொடர்புகள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என, எல்லார் வீட்டிலும் மூக்கை நுழைக்கும் பயில்வானையே, நடிகை ஷகிலா ஒரே ஒரு விஷயத்தை சொல்லி ஆப் செய்து விட்டார்.

ஆனால் அந்த விஷயத்துக்கு அன்று மறுப்பு தெரிவித்த பயில்வான், இன்று அதை உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக தன் வீட்டில் ஒரு வேலையை செய்துள்ளார். கடந்த மாதம் நடிகை ஷகிலாவும் பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொண்ட பேட்டி பலராலும் பெருமளவில் பேசப்பட்டது.

அந்த பேட்டியில் நடிகை ஷகிலா, எல்லாருடைய குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இப்படி பொதுவெளியில் பேசுகிறீர்களே, உங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விஷயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களின் மூன்றாவது மகள் யாரை காதலிக்கிறார் என்று தெரியுமா என கேள்வி எழுப்பியதோடு, அதற்கான ஷாக் பதிலையும் கொடுத்திருந்தார்.

பயில்வானின் மூன்றாவது மகள், அவருடன் படிக்கும் ஒரு பெண் தோழியை தான் காதலித்து வருகிறார், உங்கள் பெண் ஒரு பெண்ணையே காதலிப்பது கூடவா உங்களுக்கு தெரியாது, எல்லார் வீட்டு விஷயங்களும் உங்களுக்கு தெரியுமே, அப்போது இதுவும் தெரிந்திருக்கும் தானே.. உங்கள் மகள் ஒரு லெஸ்பியன் என்று என பகிர் தகவலை கிளப்பியிருந்தார். இதை கேட்டு ஷாக்கான பயில்வான் ஒரு மாதிரி பதட்டமடைந்தார்.

பின்னர், இப்போது உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ, அப்படித்தான் நீங்கள் விமர்சிக்கும் எல்லோருக்கும் வலிக்கும் என பாடம் புகட்டினார் நடிகை ஷகிலா. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பயில்வான் இப்படி பேச வேண்டாம், இப்படி பேசினால் உங்கள் நாக்கே அழுகிவிடும் என்று கொந்தளித்திருந்தார். பெரிய பெரிய நடிகர் நடிகைகளையே அசால்டாக ஆட்டி பார்க்கும் பயில்வானையே நடிகை சகிலா ஆட்டி பார்த்தது பெரும் பேசு பொருளாக இருந்தது.

இதை அடுத்து அந்த சர்ச்சையில் சிக்கிய அவரது மகளுக்கு, யாருக்கும் தெரியாமல் மிக எளிமையான முறையில், தனது வீட்டிலேயே நடிகர் பயில்வான் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளார். பிறகு நிச்சயம் முடிந்த கையோடு மாப்பிள்ளை என் மனைவியின் அண்ணன் மகன் தான், அவர் ஐடியில் வேலை பார்க்கிறார், இருவரும் ஏற்கனவே காதலித்து வந்தார்கள், இந்த தகவல் எனக்குத் தெரிய வந்ததும் மைத்துனருடன் பேசி நிச்சயம் செய்துவிட்டேன் என்று கூறி நிச்சய போட்டோவையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

பிறகு மீண்டும் நடிகை ஷகிலா, பயில்வான், அவரின் மகளுக்கு ஏன் இவ்வளவு அவசரமாக திருமண ஏற்பாடு செய்து நிச்சயம் செய்து முடித்தார் என்றும், அவர் வீட்டில் ஒரு நல்ல காரியம் நடந்ததற்கு நான்தான் காரணம், அன்று நான் அவரின் மகள் பற்றி உண்மையை சொன்னதால் தான் இவ்வளவு சீக்கிரம் அந்த பெண்ணுக்கு நிச்சயம் நடந்திருக்கிறது என கூறியதோடு, வெளியில் இருந்து மாப்பிள்ளை பார்க்காமல் சொந்தத்துக்குள்ளேயே பேசி செட்டப் செய்து, நிச்சயம் செய்தது ஏன் என கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு, இனியும் தன்னை பற்றி விமர்சித்தால் பல விஷயங்களை வெளியே சொல்லுவேன் என்றும் பயில்வானை எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.