காட்டி கொடுத்த விஜய்யின் முக்கிய பொருள்… திரிஷா உடன் விஜய்க்கு அங்கே என்ன வேலை.?

0
Follow on Google News

நடிகர் விஜய்க்கும், நடிகை த்ரிஷாவிற்கும் இடையே கிசு கிசு செய்தி, குருவி, கில்லி போன்ற படம் வெளியான காலகட்டத்திலிருந்தே வந்து கொண்டுதான் இருந்தது. அதை வதந்தியென பலரும் புறம் தள்ளி வந்த நிலையில் நடிகை திரிஷா விஜயின் பிறந்தநாளுக்கு போட்ட ஒரே ஒரு வாழ்த்தால், தற்போது சினிமா வட்டாரத்தில் விஜய் – திரிஷா இருவருக்கும் இடையிலான கிசு கிசு டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், விஜய்-சங்கீதாவிற்கு இடையே அடிக்கடி விவாகரத்து என்ற செய்திகள் வந்த வண்ணமே இருக்கும். நடிகர் விஜய், சங்கீதாவை விவாகரத்து செய்யப் போகிறார், அவர் பிரபல முன்னணி நடிகையை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பல தகவல்கள் வெளிவரும்.

அதிலும் அந்த முன்னணி நடிகை வேறு யாரும் இல்லை, நடிகை திரிஷா தான். அதேபோல் இந்த முறையும், விஜய், த்ரிஷா இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மேலும் இது நடிகர் விஜயின் அரசியல் Entry-க்கு End Card போடும் விதமாகவும் அமைந்துள்ளது. நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக இருவரும் ஜோடியாகவே சென்றது முதல், லியோ படத்தில் வரும் முத்த காட்சி வரை என, பல விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சையாக வெடித்தது.

ஏற்கனவே விஜய்க்கும் திரிஷாவிற்கும் இடையே ஏதாவது இருக்குமோ என பலரும் சந்தேகப்பட்டு வந்த நிலையில், திரிஷா, ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்பட்ட விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, ஆனால் அவர் ஒரு படி மேலே சென்று அந்த போட்டோவுடன் ஒரு ஆங்கில மொழி பாடலையும் பதிவிட்டு இருந்தார்.

அந்த பாட்டின் Lyrics கேட்டு தான் தற்போது பலரும் இருவரையும் சேர்த்து வைத்து விமர்சித்து வருகின்றனர். அதில், “நீதான் என் காதல், சாகும் வரை நீதான் என் காதல்” என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில்தான் த்ரிஷா மற்றும் விஜய் இருக்கும் பழைய படங்களை நெட்டிசன்கள் தோண்டி பார்த்தால், அதில் விஜய் தனியாக நடக்கும் போது உள்ள ஒரு போட்டோவும், திரிஷா பக்கத்தில் ஒரு கால் இருக்கும் இன்னொரு போட்டோவும் இணையத்தில் வைரலானது.

அதில் விஜய் அணிந்திருந்த அதே கருப்பு, வெள்ளை, ஷூ.. த்ரிஷா அருகில் அமர்ந்திருக்கும் நபரின் காலிலும் இருக்கும். இதனால் விஜயும் திரிஷாவும் இணைந்துதான் அடிக்கடி வெளிநாடு சென்றுள்ளனர் என பல புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் . அதேபோல் த்ரிஷா பயணம் செய்யும் அதே Location-களில் எல்லாம் விஜயும் இருந்தது சில போட்டோக்கள் மூலமும் தெரியவந்துள்ளது. இதனால் பலரும் விஜயையும், திரிஷாவையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரம் தான் விஜயின் அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. விஜய், த்ரிஷா விவகாரம், சம்பந்தப்பட்ட இருவரின் Personal விஷயம் என்றாலும், அவர் பொது வாழ்க்கைக்கு வரும்போது இந்த விவகாரம் அரசியலை பாதிக்க தான் செய்யும், இது குறித்து மக்களும் கேள்வி கேட்க தான் செய்வார்கள்! இதற்கு விஜய்யும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்பதே சினிமா பத்திரிக்கையாளர்களின் கருத்து!