விஸ்வரூபம் எடுக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம்.. சட்டத்தின் பிடியில் சிக்கும் நயன்-விக்கி..

0
Follow on Google News

வாடகை தாய் முறை என்பது குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோர்களுக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் இதை பல சினிமா பிரபலங்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குழந்தை பெற்றுக் கொண்டால் தங்கள் அழகு போய்விடும், மேலும் பத்து மாதம் ஒரு கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு பல சிரமங்களை அந்த பெண் எதிர்கொள்கிறார்.

இப்படி பல தியாகங்களை செய்துதான் ஒரு தாய்க்கான அந்தஸ்தை ஒரு பெண் அடைகிறாள். ஆனால் இது போன்ற சிரமங்களை எதிர்கொள்ள விருப்பமில்லாத பெண்கள் வாடகை தாய் முறையை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணின் கர்ப்பப்பை பலவீனமாக இருந்தாலோ, அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் கர்ப்பமாக முடியாமல் இருந்தாலோ, குழந்தையை சுமக்க முடியாமல் இருக்கும் அந்த பெண்ணிற்காக வேற ஒரு பெண் அந்த குழந்தையை பெறுவது வாடகை தாய் முறையாகும்.

இது ஒரு மரபியல் மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் முறை, இதுபோன்று குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கும், அந்த குழந்தைக்கு எந்த ஒரு தொடர்பும் இருக்காது. வாடகைத்தாய் முறை என்பது மனைவியின் கருமுட்டையில் கணவனின் விந்தணுவை கொண்டு கரு உருவாக்கப்படும். பின் ஒரு வாடகை தாயின் கரு பையில் அந்த கரு பொருத்தப்பட்டு, அந்த குழந்தையை வாடகை தாய் சுமந்து பெற்றெடுப்பார்.

வாடகை தாயின் மூலம் குழந்தையை பெற்றெடுக்க இந்தியாவில் பல சட்ட விதிமுறைகள் உள்ளது, அதில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியினருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியிருக்க வேண்டும். மலட்டுத்தன்மை நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும். பணப்பரிவர்த்தனை கூடாது. வயது விளிம்பும் உண்டு. மேலும் ஒரு பெண்ணால் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் குழந்தை பெறமுடியாமல் போகும் போது மட்டுமே அந்தப் பெண்ணின் அனுமதியுடன் வாடகை தாய் முறை சிபாரிசு செய்யப்பட வேண்டும்.

வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, டி. ஏன்.எ. பரிசோதனை மூலம் இன்னாரின் குழந்தை என்று நிரூபிக்கப் பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்த உயிரியல் பெற்றோர்கள் அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவேண்டும். வாடகை தாய்க்கு கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி அளிக்கப் படவேண்டும். ஒரு பெண் மூன்று தடவைக்கு மேல் தன் கர்ப்பப்பையை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது.

இப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள பல விதிமுறைகள் உள்ளன, இதில் முக்கியமானது வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்று கொள்ள விரும்பும் தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 5 வருடம் நிறைவடைத்திருக்க வேண்டும், ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் முடிந்த 4 மாதத்தில் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளது சட்டவிதிப்படி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கணவர் அல்லது மனைவி இருவரின் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அது தொடர்பான மருத்துவ சான்றிதழ் பெற்ற பின்பு தன வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால் சட்ட விதிகளை நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் மீறியதாக பல புகார்கள் எழுந்த நிலையில். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் இது தொடர்பாக, வாடகை தாய் பெற்றுக் கொள்ளும் விதிமுறைகளை பின்பற்றி தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பது குறித்து மருத்துவ சேவை இயக்குனர் மூலம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விரைவில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு பதியப்பட வாய்ப்பு உள்ளதால், நீதிமன்ற விசாரணையின் பொது, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தை குறித்து பல்வேறு தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.