சுவற்றில் அடித்த பந்து போல் ஜோதிகாவின் நிலைமை… 80 கோடிக்கு எத்தனை பள்ளிக்கூடம் கட்டலாம்…

0
Follow on Google News

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்பு ஜோதிகா சினிமாவில் நடிக்க கூடாது குடும்பத்துடன் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என சிவகுமார் போட்ட கண்டிஷனை சூர்யாவும், ஜோதிகாவும் ஏற்று கொண்ட பின்பு தான் இவர்கள் திருமணத்திற்கு சிவகுமார் ஒப்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு சில வருடம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த வந்த ஜோதிகா, இரண்டு குழந்தை பிறந்த பின்பு 36 வயதினிலே படத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார், இது அவருடைய மாமனார் சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என கூறப்பட்டது. இருந்தும் தொடர்ந்து ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் நடித்து வந்தது அவருடைய குடும்பத்தில் மிக பெரிய புகைச்சலை உருவாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் சூர்யா – ஜோதிகா தம்பதியினர். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்த ஜோதிகா தமிழ் தவிர்த்து பிற மொழி படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பேசுகையில், கோவில்களை சுத்தமாக பராமரிக்க செலவு செய்கிறோம், ஆனால் மருத்துவமனைகள் சரியாக பரமாரிக்கப்படாமல் இருக்கிறது. கோவில்களை விட மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் முக்கியம் என ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்பொழுது ஜோதிகா மும்பையில் சுமார் 80 கோடி மதிப்பில் மிக பெரிய ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கி குடியின்றியுள்ளார், இதற்கு ஒரு கோடி ரூபாயில் ஒரு வீட்டை வாங்கி ஜோதிகா குடும்பத்துடன் வாசிக்கலாம், மீதம் உள்ள பணத்தில் எத்தனையோ பள்ளிக்கூடம் ஜோதிகா கட்டலாம் என பலரும் ஜோதிகாவிடம் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.