குறைத்து மதிப்பிட்டு உதாசீனபடுத்திய ராஜமௌலி… 80 கோடி சொத்துக்களை தனமாக வழங்கிய பலம் பெரும் நடிகை..

0

1960 – 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவருக்கு 84 வயது, திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். சினிமாவில் நடிகை காஞ்சனா சம்பாதித்த பணத்தில் சென்னை தி.நகரில்வாங்கிய சொத்துக்களை காஞ்சனாவின் உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர்.

இதனால் தன்னுடைய சொத்துக்களை மீட்க நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தவர். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக் கொண்டார். இந்நிலையில் சொத்துக்கள் மீண்டும் கிடைத்ததால், ஏற்கனவே வேண்டி கொண்டது போன்று ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்தார் நடிகை காஞ்சனா

நடிகை காஞ்சனா திருப்பதி கோவிலுக்கு வழங்கியுள்ள சொத்துக்களில், திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் போன்று திநகர் பகுதியில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 6 கிரவுண்ட் இடத்தில் பத்மாவதி தாயாருக்கு 3 கிரவுண்ட் இடத்தில் கோயிலும், மீதமுள்ள 3 கிரவுண்ட் இடத்தில் மடப்பள்ளி, சுவாமி வாகனங்கள் வைக்க இடம், புஷ்கரணி ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன.

பத்மாவதி தாயார் கோயில் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பூர்த்தியடைந்த நிலையில், சமீபத்தில் கோயில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்படும் மூலவர் பத்மாவதி தாயார் சிலையானது திருப்பதியில் வடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் பிஸியாக நடித்து சம்பாதித்த காரணத்தால் எனக்கு திருமணம் செய்துவைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர் என தெரிவித்துள்ள நடிகை காஞ்சனா.

நானும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிட்டேன். இப்போது எனது தங்கை ஆதரவில் இருக்கிறேன். ஆன்மிக ஈடுபாடுகளில் தீவிரமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வதும், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதுமாக எனது பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் கேட்டு இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்த நடிகை காஞ்சனா.

இந்த நிலையில் RRR மற்றும் பாகுபலி போன்ற பிரமாண்ட படம் இயக்கிய ராஜமவுலி பாகுபலி படத்தில் நடிக்க இயக்குனர் ராஜமவுலி பழம்பெரும் நடிகை காஞ்சனாவை அணுகியுள்ளார். படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க கால்ஷீட்டும் கேட்டிருக்கிறார் ராஜமௌலி. இந்த நிலையில் நடிகை காஞ்சனா பாகுபலி படத்தில் நடிக்க 5 லட்சம் சம்பளமாக கேட்டிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் ராஜமௌலி அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 80 கோடி மதிப்புள்ள தன்னுடைய சொத்துக்களை கோவிலுக்கு தானமாக வழங்கிய ஒரு நடிகையை ராஜமௌலி குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.