யோவ்.. நான் அப்படி தான்யா.. முன்னனி நடிகர்களை ஓவர் டேக் செய்யும் யோகி பாபு..

0

தமிழ் சினிமாவில் தற்பொழுது காமெடி நடிகர்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது, காமெடி நடிகராக இருந்த நடிகர் வடிவேலு அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த சந்தானம், சூரி ஆகியோர் தற்பொழுது தொடர்ந்து ஹீரோவாக பல படங்கள் கமிட் ஆகியுள்ளனர்.

இவர்களால் காமெடி கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடிக்க முடியவில்லை, இதில் நடிகர் சந்தானம் காமெடி வேடத்திற்கு குட் பை சொல்லிவிட்டு, நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கின்ற ஒரு முடிவில் உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் நடிகர் சூரி அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தவர், தற்பொழுது விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த பின்பு அந்த படம் வெளியாவதற்கு முன்பே பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி வருகிறார்.

இதனால் படிப்படியாக தன்னுடைய காமெடி வேடங்களை குறைத்து வரும் நடிகர் சூரி, புதிதாக எந்த ஒரு காமெடி படத்திலும் கமிட்டாவது இல்லை என்கின்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து இயக்குனர்களும் காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்வதற்கு யோகி பாபு நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

தற்பொழுது முன்னணி நடிகர்களை விட பிஸியாக இருக்கும் யோகி பாபு, தன்னிடம் கால் சீட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் ஒரு கண்டிஷன் போடுகிறார், அதாவது தன்னுடைய காட்சிகள் அனைத்தும் சென்னையிலே படமாக்கப்பட வேண்டும். காரணம் நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் பல படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் என்னால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்கின்ற கண்டிஷன் உடன் தான் கால் சீட் கொடுக்கிறாராம்.

இருந்தாலும் சில காட்சிகளுக்காக இட தேர்வுகள் சென்னையில் இருந்து சற்று தொலைவில் படமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து சற்று தொலைவில் எண்ணூர் பகுதியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் படப்பிடிப்பு கலந்து கொள்வதற்காக யோகி பாபு வேண்டுமென்றே மிக தாமதமாக வந்துள்ளார். இதற்கு இயக்குனர் என்ன சார் நீங்க இவ்ளோ தாமதமாக வாரீர்கள் என்று கேட்டதற்கு,

நான் தான் முதலே உங்களிடம் சொல்லிவிட்டேன் சென்னையில் படப்பிடிப்பு நடத்துங்கள், சற்று தொலைவில் நடத்தினால் எனக்கு மிகவும் சிரமம் என்று, பின்பு சென்னையிலிருந்து தொலைவில் படப்பிடிப்பு நடத்தினால் நான் என்ன செய்வது. அப்படித்தான் வருவேன்,உங்களுக்கு நான் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்றால் நீங்கள் சென்னை அருகிலேயே படப்பிடிப்பு நடத்துங்கள் என்று காரராக சொல்லிவிட்டாராம் யோகி பாபு.

அதனால் அடுத்தடுத்து யோகி பாபுவை படத்தில் கமிட் செய்யும் இயக்குனர்கள், இவரிடம் கால் சீட் வாங்கி விட்டால் சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும், அவ்வாறு இல்லாமல் தொலைவில் நடத்தினால் நிச்சயம் நம்மளை பவாட்டி எடுத்து விடுவார் என்பதால் அவருக்கு ஏற்றார் போல் பல இயக்குனர்கள் சென்னையிலே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னணி நடிகர்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு பல கண்டிஷன்களை யோகி பாபு இயக்குனர்களிடம் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here