கீர்த்தி சுரேஷ் திருமணத்தை உறுதி செய்த பெற்றோர்.. நேரில் சென்று வாழ்த்திய விஜய்.. மாப்பிள்ளை யார் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இசை அமைப்பாளர் அனிருத் நெருங்கி பழகி வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்க பட்டு வந்தது. அனிருத் – கீர்த்தி சுரேஷ் இருவரும் ஜோடியாக பல்வேறு பொது இடங்களுக்கு சுற்றி வந்த புகைப்படங்களும் வெளியானது. மேலும் இரவு பார்ட்டியில் இந்த ஜோடி கலந்து கொண்ட புகைப்படத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருந்த காட்சி, இந்த ஜோடி பற்றி வெளியான கிசு கிசு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.

அனிரூத் ஒல்லியாக இருப்பதால், அவருடைய உடலுக்கு தகுந்தார் போல தன்னுடைய உடல் இடையையும் கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக குறைத்து கொண்டார் என்று கூட செய்திகள் வெளியானது. இதனால் விரைவில் அனிருத் – கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாவும் ஆனால் இதற்கு அனிருத் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வரமாக கீர்த்தி சுரேஷ் குறித்த திருமணம் பற்றி பரவலாக பல்வேறு தகவல்கள் உலா வந்தது, பெற்றோர் கீர்த்தி சுரேஷ் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட விரைவில் காதலனை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் கீர்த்தி சுரேஷ் மிக தீவிரமாக இறங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது, இது குறித்து கேரளாவில் உள்ள கீர்த்தி சுரேஷ் வட்டாரத்தில் விசாரித்ததில் பல தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் கேரளாவில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, தன்னுடைய பள்ளி தோழன் ஒருவரை காதலிக்க தொடங்கியுள்ளார், இவர்கள் இருவரும் தற்போது வரை சுமார் 13 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள், தொழிலதிபரான கீர்த்தி சுரேஷின் காதலருக்கு சொந்தமாக பல இடங்களில் ரிசார்ட் இருப்பதாகவும், மேலும் கீர்த்தி சுரேஷ் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே அவருடைய காதல் கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

அதேபோன்று கீர்த்தி சுரேஷ் காதலன் வீட்டிற்கும் இவர்கள் இருவருடைய காதல் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் இருவர் காதலையும் ஏற்றுக் கொண்டவர்கள், தற்போது வரை அடிக்கடி பண்டிகை நாட்களில் இரண்டு குடும்பங்களும் ஒன்றாக சந்தித்து தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரிடம் தன்னுடைய காதலனை நேரில் வரவழைத்து அறிமுகமும் செய்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் நடிகர் விஜய் உடன் நடித்துக் கொண்டிருந்தபோது கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய காதலனை நேரில் வரவழைத்து நடிகர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதன் பின்பு ஒரு முறை கீர்த்தி சுரேஷ்ன் காதலன் பிறந்தநாள் விழாவில், நடிகர் விஜய் ரகசியமாக நேரடியாக சென்று வாழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த காதல் ஜோடி திருமணம் எப்போது என விசாரித்ததில், தற்பொழுது கீர்த்தி சுரேஷ் திருமண அறிவிப்பை வெளியிட்டால், அவருடைய சினிமா மார்க்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அடுத்த மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு பின்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய பள்ளி காதலனுக்கும் திருமணம் நடந்த இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக கேரளாவில் உள்ள கீர்த்தி சுரேஷ் வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் சினிமா துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் இதற்கு முன்பு அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பற்றி வெளியான கிசுகிசுகள் உண்மை இல்லை என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.