நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்… நன்றி உணர்வு விஜய்க்கு சுத்தமாக இல்லை.. களத்தில் இறங்கிய முருகதாஸ்..!

0
Follow on Google News

பல வெற்றி படங்களை இயக்கி மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். கடந்த 2001ம் ஆண்டு அஜித் நடிப்பில் தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார், முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்து கொண்டவர் ஏ ஆர் முருகதாஸ். தீனா படத்தில் மூலம் நடிகர் அஜித்தை தல என்கிற அடைமொழியை கொடுத்தார் முருகதாஸ்.

தீணா தொடர்ந்து அடுத்தடுத்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு என ஒவ்வொரு படமும் மெகா ஹிட் அடிக்க முன்னணி இயக்குனர்கள் வரிசையில் உச்சத்தில் அமர்ந்தார் ஏ ஆர் முருகதாஸ். கஜினி படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு சென்ற ஏ ஆர் முருகதாஸ் அங்கேயும் ஹிட் படத்தை கொடுத்து முத்திரை பதித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஓடுகிற குதிரையில் சவாரி செய்யக் கூடியவர், அந்த வகையில் காலகட்டத்திற்கு ஏற்ப ஹிட் பட இயக்குநரை நேரில் அழைத்து நாமளும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிற குதிரையில் சவாரி செய்யக் கூடியவர் ரஜினிகாந்த்.

அதே போன்று ரஜினிகாந்த் பார்முலாவை பின்பற்றி வரும் நடிகர் விஜய், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மிகப்பெரிய உச்சத்தில் இருந்த ஏ ஆர் முருகதாஸ் என்கிற ஓடுகிற குதிரை மீது சவாரி செய்வதர்க்கு முன்வந்து, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார் விஜய், இவர்கள் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படம் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலே நம்பர் ஒன் இடத்தை தற்பொழுது வரை தக்க வைத்து வருகிறது.

அந்த அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் துப்பாக்கி. அதன் பின்பு தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, சர்க்கார் போன்ற படங்களில் நடித்தார் விஜய் தொடர்ந்து மூன்று படங்களுமே விஜய்க்கு ஹிட் கொடுத்த படம், இதில் சர்க்கார் படத்தின் கதையில் விஜய் தலையீடு செய்து சில அரசியல் கருத்துக்களை இடம் பெற செய்ததால், இந்த படம் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனால் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் எதிப்பை முருகதாஸ் பெற்றார்.

அடுத்து ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படம் சரிவர போகவில்லை. இது முருகதாஸுக்கு மிக பெரிய சரிவை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் தன்னுடைய இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து விஜய்க்கு மூன்று ஹிட் படங்கள் கொடுத்தை மனதில் வைத்து மீண்டும் விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்குவதற்கு தயாரானார் முருகதாஸ்.கதை தயாரான நிலையில் விஜய் பீஸ்ட் படத்தில் கமிட் ஆகுவதற்கு முன்பு முருகதாஸ் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் டான், டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ஓடுகிற குதிரையாக இருந்த நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் கமிட் ஆனார், இது முருகதாஸுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தும் அடுத்து விஜய் கால் சீட் தருவார் என்று காத்திருந்தார், ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. விஜய் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்கின்ற விரக்தியில் வேறு ஒரு நடிகரை தேடினார் முருகதாஸ்.

தற்பொழுது முருகதாஸ் படத்தில் நடிகர் சிம்பு கமிட்டாகியுள்ளார் என்றும், இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் நிச்சயம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்து மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைப்பார் முருகதாஸ் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நடிகர் அஜித் பொதுவாக அவருக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் சரிவை சந்திக்கும்போது மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விடக் கூடியவர். அந்த வகையில் சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோருக்கு உதவிக்கரம் நீட்டியவர் அஜித். ஆனால் தொடர்ந்து விஜய்க்கு மூன்று ஹிட் படங்கள் கொடுத்தார் முருகதாஸ். அவருக்கு உதவி செய்வதற்கு மனமில்லாத விஜய்க்கு நன்றி உணர்வு சுத்தமாக இல்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.