லைட்டா திமுகவை மிரட்டி பார்த்த சர்வ கட்சி சரவணன்… அசிங்கப்படுத்தி அனுப்பிய பரிதாபம்..

0
Follow on Google News

திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுரை டாக்டர் சரவணன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவில் போட்டியிட சீட் கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் காலையில் கட்சியில் சேர்ந்து மதியம் அக்கட்சியின் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜகவில் சரவணன் இணைவதற்கு முன்பு திமுக மட்டுமின்றி மதிமுக, பாஜக என பல கட்சிகளில் இருந்து ஒரு ரவுண்டு சென்று வந்தவர்.

சட்டமன்ற தேர்தலில் சரவணன் தோல்வியை தழுவினாலும், பாஜகவில் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவராக நியமித்தது அக்கட்சியின் தலைமை. பொதுவாக சரவணன் நீண்ட நாட்களாக எந்த ஒரு கட்சியிலும் பயணித்தது கிடையாது. அந்த வகையில் பல கட்சிகள் தாவி வந்த சரவணன் மீண்டும் ஆளும் திமுகவில் இணைவது குறித்து திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

ஆனால் திமுக தரப்பில் இருந்து மீண்டும் சரவணனை இணைப்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வரவில்லை. இதனால் தொடர்ந்து பாஜகவில் பயணித்துக் கொண்டிருந்தார் சரவணன். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சர் பிடிஆர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட இறுதியில் பி டி ஆர் கார் மீது செருப்பு வீச்சும் நிலைக்கு சென்றது.

செருப்பு வீச்சு சம்பவத்தில் ஏற்பட்ட அவமானத்தை மறைக்க ஏற்கனவே திமுவுக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்த சரவணனை அன்று இரவு நிதி அமைச்சர் வீட்டிற்கு அழைத்து பேட்டி கொடுக்க வைத்தனர் திமுக தரப்பினர். பிடிஆர் சந்திப்புக்கு பின்பு பாஜகவில் இருந்து விலகுவதால் அறிவித்த சரவணன் திமுகவுக்கு ஆதரவாக பேசினார்.

அதன் பின்பு தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்த சரவணன் திமுகவுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் பேசி வந்தார். இந்த நிலையில் விரைவில் திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்புகள் சரவணனுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில். திமுகவின் மூத்த தலைவர்கள் மீண்டும் சரவணன் கட்சிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் முதல்வர் மு க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திக்க கூட சரவணனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பெரும் பதவிகள் திமுக தரப்பிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்த்த சரவணன் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்பொழுது திமுகவில் மாநில மற்றும் மாவட்ட பதவிகள் அனைத்தும் அறிவிக்கப்பட்ட நிலையில் சரவணனுக்கு இனி திமுகவில் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றது திமுக வட்டாரம்.

இந்த நிலையில் திமுக தரப்புக்கு லைட்டா மிரட்டல் விடும் போக்கில், தன்னை மீண்டும் பாஜகவிற்கு அழைக்கிறார்கள், மேலும் மாநில அளவில் பதவி தருவதாக உறுதியும் கொடுத்துள்ளார்கள், நீங்கள் எதுவும் பதில் சொல்லவில்லை என்றால் நான் பாஜகவுக்கு மீண்டும் சென்று விடுவேன் என்கின்ற ஒரு மிரட்டலை சரவணன் திமுக தரப்பிற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் சரவணன் தரப்பினர் பாஜக தலைமை சரவணனை அழைப்பதாக ஒரு தகவலை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் திமுக தரப்பிலிருந்து உங்களை பாஜகவிற்கு அழைத்தால் நீங்கள் தாராளமாக போகலாம். கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று முகத்தில் அடித்தது போல் அசிங்கப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக தரப்பில் விசாரித்ததில், அப்படி ஒரு எந்த ஒரு உறுதி மொழியும் பாஜக கொடுக்கப்படவில்லை, மேலும் மீண்டும் பாஜகவிற்கு வந்தால் சரவணனை ஏற்றுக் கொள்ளும் நிலைமையில் பாஜக தலைமை இல்லை என்கிறது பாஜக வட்டாரங்கள்.