பகாசூரனை காப்பாற்றிய உதயநிதி… அந்த மனசு தான் சார் கடவுள்..என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பகாசூரன். இந்த படத்தை சர்ச்சை கூறிய இயக்குனர் மோகன் ஜி இயக்கியிருந்தார். இவருடைய இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான திரௌபதி படத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவரை சீண்டுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் இருந்து அந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி க்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்த எதிர்ப்பு தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்து படங்களிலும் எதிரொலித்தது. இதனால் மோகன் ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான ருத்ரதாண்டவம் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்புக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் பகாசூரன் படத்திற்கு, இதற்கு முன்பு மோகன் ஜிக்கு எதிராக எழுந்த சர்ச்சை போன்று இம்முறை இல்லை.

இதற்க்கு முக்கிய காரணம் பகாசூரன் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ஸ் மூவீஸ் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெற்று வெளியிட்டது, மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்டை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இதனால் பொதுவாக மோகன் ஜி க்கு எதிராக அரசியல் ரீதியான எதிர்ப்புகள் பகாசூரன் படத்திற்கு பெருமளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் பகாசூரன் படம் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் நடந்த ஒரு சம்பவத்தை அந்த படத்தில் நடித்த பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவிக்கையில்,

நான் ஒரு 70, 80 படம் பண்ணியிருக்கிறேன், என்னுடைய படத்தில் கூட நான் அப்படி ஒரு வேஷம் போட்டது கிடையாது, எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரத்தை பகாசுரன் படத்தில் உருவாக்கி தந்தவர் மோகன் ஜி.. நான் இந்த படத்தில் கமிட் ஆகி நடிக்க சென்ற போது இயக்குனர் நடந்து கொண்ட விதம் எனக்கு அந்த படத்தில் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது.

மேலும் மோகன் ஜி இயக்குவதை பார்த்து பிரமித்துப் போனேன். அவர் வேலை வாங்கும் விதமே, அவ்வளவு அழகாக இருக்கும். அந்தப் படத்தில் நடித்த செல்வராகவன் மிகப்பெரிய இயக்குனர், அதேபோன்று அந்த படத்தின் நடித்த நட்டி மிகப்பெரிய கேமராமேன். இருந்தாலும் அந்தப் படத்தில் இயக்குனர் மோகன் ஜிக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதைக் கேட்டு ஒத்துழைத்தார்கள், அதனால் அந்த படம் ஒவ்வொருவரின் நடிப்பும் பிரமிக்கும் வகையில் இருந்தது என தெரிவித்த கே ராஜன்.

மேலும் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை நான் சந்திக்க சென்றேன். சுமார் பத்து நிமிடம் சந்தித்து கிளம்பும்போது, அண்ணே பிரம்மாதம் என்றார். அதற்கு நான் என்ன தம்பி என்று கேட்டேன், அதற்கு உதயநிதி , அண்ணே படம் பார்த்தேன் நன்றாக நடித்து இருக்கிறீர்கள் என்று சொன்னார். அங்கே சுமார் 10க்கு மேற்பட்டவர்கள் அங்கு இருந்தார்கள், நான் நடித்த எந்த படத்தை அவர் சொல்கிறார் என்று, எனக்கு புரியவில்லை,

ஏனென்றால் நான் துணிவு படத்தில் இரண்டு காட்சிகள் நடித்திருக்கிறேன், அது போன்று சமீபத்தில் வெளியான படங்களில் சுமார் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் உதயநிதி ஸ்டாலின் எந்த படத்தை பாராட்டுகிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது, உடனே, அண்ணே பகாசூரன் பார்த்தேன், பிரமாதம் உங்கள் கதாபாத்திரம் அருமையாக இருக்கின்றது என்று உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.

அதைக் கேட்ட உடனே நான் நெகிழ்ந்து விட்டேன்,உதயநிதிக்கு மிகச் சிறிய வயது ஆனால் அவருக்கு மிக பெரிய மனது, இந்த படத்தை பாராட்டுவதற்கு ஒரு பெரிய மனது வேண்டும் என்று கே.ராஜன் தெரிவித்துள்ளார்.