ஓவர் நைட் ஒபாமா ஆன தனுஷ்.. ஜஸ்ட் மிஸ்.. இல்லை என்றால் தனுஷ் நிலைமை என்னவாயிருக்கும்.?

0
Follow on Google News

தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இயக்குனர் கஸ்தூரிராஜா, இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்பு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கஸ்தூரிராஜா. இவருடைய படங்கள் பெரும்பாலும் கிராமிய கதை அம்ச படமாகவே இருக்கும், ஆரம்பத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் வெற்றியை பெற்றது.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த கஸ்தூரிராஜா சொந்த தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது, இதனால் கடன் வாங்கி படம் எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட கஸ்தூரிராஜா ஒரு கட்டத்தில் பெரும் கடன் சுமையில் தத்தளித்தார். கஸ்தூரி ராஜா சொந்த தயாரிப்பில் அடுத்த ஒரு சில படங்கள் பண பற்றாக்குறையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இனி சினிமாவில் நமக்கு எதிர்காலம் இல்லை என கருதி, மேலும் குடும்பத்துடன் சென்னையில் கஷ்டப்படுவதை விட குடும்பத்துடன் சொந்த ஊரான தேனிக்கு சென்று விடுவோம் என்கின்ற முடிவுக்கு வந்த கஸ்தூரிராஜா, தேனிக்கு சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு தொழில் செய்து சென்னையில் வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்கின்ற முடிவுக்கு வருகிறார் கஸ்தூரிராஜா.

இப்படி ஒரு சூழலில் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் செல்வராகவன் அவருடைய தந்தையிடம் சென்று ஒரு 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுங்கள், நான் ஒரு படம் இயக்குகிறேன். இந்த படம் பெரிய லாபத்தை தரவில்லை என்றாலும் கூட நிச்சயம் நஷ்டம் ஏற்படாது என்கின்ற ஒரு கோரிக்கையை தந்தை கஸ்தூரிராஜாவிடம் வைக்கிறார் செல்வராகவன்.

அதற்கு கஸ்தூரிராஜா ஏற்கனவே கடன் பிரச்சனையால் தான் நான் சென்னையை விட்டு தேனிக்கு போகும் முடிவுக்கு வந்துள்ளேன். இந்த சூழலில் மீண்டும் கடன் மீண்டும் கடன் வாங்க சொன்னால் எப்படி என்று கேட்டுள்ளார் கஸ்தூரி ராஜா. அதற்கு செல்வராகவன் நீங்கள் எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும் என பிடிவாதம் பிடித்துள்ளார் செல்வராகவன்.

அதற்கு கஸ்தூரிராஜா சரி ஓகே, ஹீரோ யார் என்று கேட்க.? இது மிக சிறிய பட்ஜெட் படம் என்பதால் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் அதற்கும் நாம் தான் சம்பளம் கொடுக்க நேரிடும். அதனால் தம்பி தனுஷை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்தேன் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த படத்தை தன்னுடைய மகன் செல்வராகவன் இயக்குகிறார் என்று சொன்னால், பைனான்சியர்கள் கடன் தர மாட்டார்கள் என்பதால் தன்னுடைய படம் என தெரிவித்து கடன் வாங்கி தருகிறார் கஸ்தூரி ராஜா. கடும் சிரமத்துக்கு பின்பு துள்ளுவதோ இளமை படம் திரைக்கு வருகிறது, மகன் இயக்கிய படம் என்றால் புது முக இயக்குனர் என யாரும் படத்தை வாங்க மாட்டார்கள் என்பதால், இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயரிட்டு படத்தை வியாபாரம் செய்கிறார் கஸ்தூரி ராஜா.

துள்ளுவதோ இளமை படம் வெளியாகி முதல் நாள் பெரிதாக ஏதும் வரவேற்பு இல்லை. போச்சுடா என்று அன்று இரவு தூக்கமின்றி தவிக்கிறார் கஸ்தூரி ராஜா, இரண்டாவது நாள் தொடங்கி அன்றைய கால கட்ட இளசுகள் திரையரங்குகளில் குவிய தொடங்குகிறார்கள் துள்ளுவதோ இளமை படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து கஸ்தூரி ராஜாவுக்கு பெரும் பணத்தை அள்ளி கொடுத்தது.

இதனால் கடன் தொல்லையால் சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் கிளம்ப இருந்த கஸ்தூரிராஜா கடனையும் அடைத்து தேனிக்கு போகும் முடிவை கைவிட்டார். அந்த வகையில் பெரும் கடன் சுமையால் தத்தளித்து வந்த கஸ்தூரிராஜா குடும்பத்தினர் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதை போன்று, துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.

ஆனால் இந்த படம் சற்று தடுமாறி தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட இன்று கஸ்தூரி ராஜா மூட்டை கட்டிவிட்டு குடும்பத்துடன் தேனிக்கு சென்று இருப்பார், தனுஷ் தேனி மாவட்டத்தில் ஏதோ ஒரு பகுதியில் கிடைத்த வேலையை பார்த்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்திருப்பார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளையும் திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.