தொழிலார்கள் வயிற்றில் அடிக்கும் சூர்யா… கதறும் தொழிலார்கள்.. இரக்கம் இல்லாமல் சூர்யா இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவியர்களின் கல்விக்கு பெரும் உதவி செய்து வருகின்றார். அவருடைய அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் திறமையான, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, அவர்களின் மேல் படிப்புக்கு அகரம் அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார் சூர்யா.

இப்படி அகரம் அறக்கட்டளை மூலம் மருத்துவர், இன்ஜினீயர் என பலர் உருவாக்கப்பட்டுள்ளார்கள். அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யாவுக்கு இந்த சமூகத்தில் ஒரு நற்பெயரும் உண்டு. இது போன்று சமூக அக்கறையுடன் செயல்படக்கூடிய சூர்யா தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க துணை போகிறார் என தொழிலாளர்கள் கதறும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படம் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவது கிடையாது. பிற மாநிலத்தில் குறிப்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் நடத்தப்படும் படப்பிடிப்புச் செலவைவிட, ஆந்திராவில் நடத்தப்படும் படப்பிடிப்பு செலவு மிகக்குறைவு என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு பிற மாநிலத்தில் நடக்கும் போது, அங்கே செட் அமைக்கும் பனி, டான்சர்ஸ், பைட்டர்ஸ், என அந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலனடைகிறார்கள். இதனால் தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்கின்ற ஒரு எதிர்ப்பு குரல் சமீபத்தில் எழுந்தது.

இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் பெரும்பாலும் ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தாலும், ஒரு சில காட்சிகளை சென்னையில் நடத்த திட்டமிட்டு இங்கிருக்கும் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் ரஜினிகாந்த். அதே போன்று அட்லீ இயக்கம் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் படம் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்து.

இந்த நிலையில் ஜவான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தார் தந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. ஆனால், ஒரு சமூக அக்கறை கொண்ட சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம் பெரும்பாலும் வெளி மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொருட்படுத்தாமல, சூர்யாவும் தமிழ்நாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை நடத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

சூர்யா இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதற்கு, சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதை விட பிற மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தால் பண செலவு குறைவு என்பதை புரிந்து கொண்டு தான் சூர்யாவும் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சூர்யா இது போன்று செயல்படுவது எங்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என்று சினிமா தமிழ் சினிமா தொழிலாளர்கள் கதறி வருவதும் குறிப்பிடத்தக்கது.