அஜித், விஜய், ரஜினியை துவம்சம் செய்த கமல்ஹாசன்… நான்கு மடங்கு சம்பளம் அதிகம்.. எத்தனை கோடி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வரூபம் படத்திற்குப் பின்பு அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை தழுவி வந்தது. இந்த நிலையில் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கையில்,நடிகர் கமல்ஹாசன் சுமார் 30 கோடி வரை தான் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார், அந்த வகையில் மிகப்பெரிய பின்னடைவில் கமலஹாசன் இருந்து கொண்டிருந்தார்.

அடுத்தடுத்து கமலஹாசனை வைத்து படம் தயாரிப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வரவில்லை. இந்த நிலையில் கமலஹாசன் சொந்த தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் விக்ரம் . இந்த படம் வெளியாவதற்கு முன்பு தொடர்ந்து தமிழ் தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் உட்பட அனைத்து படங்களும் தோல்வியை தழுவி வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் பிறமொழி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வசூலை வாரி அள்ளி குவித்தது.

ஆனால் விக்ரம் படத்திற்கு முன்பு இந்த நிலை மாறியது, தமிழ் சினிமாவாலையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார் கமல்ஹாசன். இதனை தொடர்ந்து ஒரே படத்தில் ஓஹோ என்று மற்ற அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, இன்று முதல் இடத்தில் இருக்கிறார் கமல்ஹாசன். விக்ரம் படம் தொடங்குவதற்கு முன்பு இந்தியன் 2 படத்தில் கமிட்டான கமல்ஹாசன் சம்பளம் 35 கோடி ரூபாய் பேசப்பட்டது.

ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த படம் பாதியிலேயே நின்றது, அதற்குள் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது இந்தியன் 2 பட பிரச்சனை தீர்க்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிருக்க நிலையில், கமலஹாசனின் சம்பளம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

அதாவது முன்பு 35 கோடி ரூபாய்க்கு இந்தியன் 2 படத்தில் கமிட்டான கமல்ஹாசன் தற்போது தன்னுடைய சம்பளத்தை நான்கு மடங்காக உயர்த்தி 150 கோடி ரூபாய்க்கு அதே இந்தியன் 2 படத்தில் மீண்டும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மெகா ஹிட் அடித்த பின்பு அவருடைய அடுத்த படமான இந்தியன் 2 படத்திற்கு வியாபார ரீதியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிட்டத்தக்கது.