இனி நான் விடவே மாட்டேன்.. என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்க… சிம்பு ஆவேசம்..

0

நடிகர் சிம்பு நடிப்பில் பத்து தல படத்தில் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இந்தப் படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு பேசியதாவது.

என்னுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்வது என்பது எனக்கு சத்தியமாக தெரியவில்லை. ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் நீங்கள் எனக்காக என்ன செய்துள்ளீர்கள், என் கூட எப்படி இருந்துள்ளீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நான் சொன்னது போன்று, நான் கஷ்டப்பட்டபோது எனக்காக நீங்கள் முட்டுக் கொடுத்து, என் தலைவன் வருவான், வருவான், வருவான் என்று சொன்னது இன்னைக்கு இன்று என்னை அழைத்து வந்து இங்கே விட்டு விட்டீர்கள்.

ஆனால் இப்போது உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், இனிமேல் நீங்கள் சந்தோசமாக இருங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் நீங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் என் தலைவன் பாருடா, என்ன பண்ணுகிறான் என்று என் தலைவன் வருவான் டா, என் தலைவன் அப்படி டா இப்படி டா என எதுவுமே வேண்டாம், நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.

நீங்கள் என்னுடைய கஷ்டத்தில் எனக்காக செய்தது போதும், இனிமேல் நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் பாருங்கள், இனிமேல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டும் சும்மா ஜாலியா, சேர் போட்டு, கூலா ஏசி ரூம்ல உட்கார்ந்து ஹேப்பியா என்ஜாய் பண்ணுங்க, ஏனென்றால் வந்துவிட்டேன், சாதாரணமாக நான் வரவில்லை, வேற மாதிரி வந்து விட்டேன் இம்முறை விடவே மாட்டேன், உங்களை இனிமேல் நான் தலை குனிய விடவே மாட்டேன் என சிம்பு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here