ரெடியாகும் ரெட் கார்ட்….. SJ சூர்யா சினிமாவில் நடிப்பதில் சிக்கல்… SJ சூர்யாவின் அடுத்த முடிவு என்ன தெரியுமா.?

0

நடிகர் அஜித் நடித்த ஆசை, உல்லாசம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் SJ சூர்யா, மேலும் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். உல்லாசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது நடிகர் அஜித் உடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் SJ சூர்யா, முதல் படமே மிக பெரிய ஹிட்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து குஷி படத்தை இயக்கினார், இரண்டாவது படமும் மெகா ஹிட், முன்றாவது படத்தில் தன்னுடைய இயக்கத்தில் தானே ஹீரோவாக நடித்தார், அப்படி அவர் இயக்கி, நடித்த நியூ படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. SJ சூர்யா படம் என்றால் இரட்டை வசனம் இருக்கும், கிளாமர் அதிகமாக இருக்கும் என்கிற விமர்சனம் இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது SJ சூர்யா படம்.

நான்கு படங்கள் வரை இயக்குநராக இருந்த SJ சூர்யா அதன் பின்பு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினர். இந்நிலையில் 2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கு படம் ஓன்று SJ சூர்யா இயக்க ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். பவன் கல்யாண் அந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. SJ சூர்யா புதிய படத்துக்கான கதையை பவன் கல்யானை நேரில் சாதித்து தெரிவித்துள்ளார், ஆனால் கதை பிடிக்கவில்லை என்று பவன் கல்யாண் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து தன்னிடம் கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுப்பதாக தெரிவித்துள்ளார், ஆனால் தயாரிப்பாளர் பரவாயில்லை, தேவைப்படும் போது வாங்கி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார், மேலும் குறுச்செய்தியும் அனுப்பியுள்ளார். இதன் பின்பு வில்லன் நடிக்கராக ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கும் SJ சூர்யா, ஹீரோக்களுக்கு இணையாக தன்னுடைய வில்லன் கதாபாத்திரத்துக்கு சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் 2014ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் SJ சூர்யாவுக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர். வட்டியுடன் நான்கு கோடி தரவேண்டும் என கேட்டுள்ளார், அதற்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக தரமாட்டேன், நீங்க கொடுத்த ஒரு கோடி ரூபாயை அப்போதே திருப்பி தருகிறேன் என்றேன் நீங்கள் தான் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்று தெரிவித்துள்ளார் SJ சூர்யா, இதன் பின்பு பஞ்சாயத்து நடந்துள்ளது, ஆனால் தனது நிலைப்பாட்டில் SJ சூர்யா உறுதியாக இருந்துள்ளார்.

இதன் பின்பு ஆக்டிவ் மற்றும் ப்ரொடியூசர் கவுன்சிலில் அந்த தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து நடிகர் SJ சூர்யா சினிமாவில் நடிக்க ரெட் கார்டு கொடுக்கப்போவதாக தகவல் வந்ததை அறிந்து, நான் எனது ஊருக்கு சென்று டீ கடை கூட போட்டு கொள்கிறேன், ஆனால் வாங்கிய பணத்துக்கு மேல் ஒரு ரூபாய் கூட அதிகம் தரமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரித்துள்ளார் SJ சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் உடன் இரவில் அனிருத் அடித்த லூட்டி… வெளியானது பரபரப்பு..என்ன நடந்தது தெரியுமா.?