சத்யராஜ் எங்கே போனார்… எல்லாம் பணம் தான்… வெளுத்து வாங்கிய கிழித்த கஸ்தூரி..

0
Follow on Google News

தமிழ்நாடு-நாடு கர்நாடகா இடையேயான காவிரி நீர் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், சமீபத்தில் கர்நாடகா முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாட்டுக்கு அணையைத் திறந்து நீர் வழங்குவதற்கு எதிராக பல்வேறு கர்நாடகா அமைப்பினர் போராட்டமும் நடத்தினர். அதுமட்டுமில்லாமல், கர்நாடகா எல்லைக்குள் செல்லும் தமிழக வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற வன்முறைத் தாக்குதலிலும் சிலர் ஈடுபட்டனர்.

இவ்வாறு தமிழகத்திற்கு எதிராக கொந்தளித்து வரும் கர்நாடகா அணையைத் திறந்து விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக இருக்கும் நிலையில், தமிழகம் பதிலடியாக கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்’ என்று நடிகை கஸ்தூரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள புனிதக் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த நடிகை கஸ்தூரியிடம் செய்தியாளர்கள் காவிரி நீர்த் தொடர்பான விவகாரம் பற்றி கருத்து கேட்ட போது, இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கட்சியும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் இருப்பதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, தமிழ்த் திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால், அவர்கள் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்ப முடியாது, காவிரி ஆறானது சீறிப் பாய்ந்து கடலோடு கலக்க வேண்டும், அப்படி பாய்ந்தோடினால் தான் அந்த நதிக்கு ஜீவநதி என்ற பெயர் பொருந்தும். ஆற்று நீரை அணைப்போட்டு தடுத்து வைத்தால், அந்த நதி ஏறி, குளம் மற்றும் குட்டையாகி இறுதியில் சாக்கடையாக மாறிவிடும்.” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இப்படி கேள்வி கேக்காமல் இருக்கும் வேளையில், கர்நாடகாவில் உள்ள பாஜக உள்பட அங்குள்ள அனைத்துக் கட்சிகளும், ‘காவிரி நீர் முற்றிலும் கர்நாடகாவிற்கு சொந்தமானது’ என்று அங்குள்ள மக்களை நம்ப வைத்து தூண்டி விடுகின்றனர். சொல்லப்போனால், கர்நாடகாவில் படித்தவர்கள் கூட கிருஷ்ணசாகர் அணையைக் கட்டிய விஸ்வரேஸரய்யர் தான் காவிரியை தோண்டி எடுத்தார் என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் கேவலாமான அரசியல் சூழல் இருக்கின்ற நிலையில், வாக்கு சேகரிப்புக்காக செயல்படும் கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நாம் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றோம் என்று நடிகை கஸ்தூரி அரசியல் வாதிகளை விளாசியுள்ளார். இவ்வாறு அரசியல் கட்சிகளை விளாசிய நடிகை கஸ்தூரி, தமிழ்த் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை.

அதாவது, முந்தைய காவிரிப் பிரச்சினைகளின் போது, குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ் போன்றவர்கள், தமிழக முதல்வருக்கு, போனில் தொடர்பு கொண்டால் சுலபமாக காவிரி பிரச்சனையை முடித்து விடலாம். ஆனால், அவர்கள் ஏன் செய்யவில்லை என எனக்குத் தெரியும், இருப்பினும் தெரியவில்லை என்று தான் நான் கூற முடியும் என்று நாசூக்காக பேசியுள்ளார். குறிப்பாக, நடிகர் சித்தார்த் திமுக – காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்தான்.

ஆனால், அவர் பெங்களூருவில் கர்நாடக அமைப்பினரால் அவமானப்படுத்தப்பட்ட போது, அந்தக் கட்சிகள் ஏதும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று கஸ்தூரி சாடியுள்ளார். மேலும், கர்நாடகாவின் வன்முறைத் தாக்குதல் மற்றும் போராட்டங்களுக்குப் பதிலடியாக, கர்நாடகாவிற்கு தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்படும் மின்சாரம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நடிகை கஸ்தூரி அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.