சரண்டரான விஜய்… உன் சவாசமே வேண்டாம் ஓடி போயிரு… விரட்டிய ரெட் ஜெயன்ட்…

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஏற்கனவே, படம் எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது பெய்டு பிரீமியர் என்ற பெயரில் 18 ஆம் தேதியே லியோ திரைப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த திட்டம் ஓவர்சீஸில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் தயாரிப்பாளர் லலித் இந்த ஐடியா வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள், ஏகப்பட்ட பிரபலங்கள், வரிசையாக ஹிட் கொடுக்கும் இயக்குனர் என மிகப்பெரிய பட்ஜெட்டில் கோடி கோடியாக முதலீடு செய்து படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், இப்போது படத்தை விநியோகிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது, தயாரிப்பாளர் லலித் லியோ படத்தை தனக்கென ஒரு சில ஏரியாக்களில் வாங்கி வைத்திருந்தார்.

அதை நடிகர், அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயண்டுக்கே கொடுத்து விடலாமா என்ற யோசனையில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, ஆள விட்டா போதும் என்று தப்பிக்கும் மனநிலையில் தெறித்து ஓடி விட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. லியோ படம் கண்டிப்பாக, கோடிக்கணக்கில் வசூலைக் குவித்து நிறுவனங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

அப்படி இருக்கையில், ஏன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் லியோ படத்தை வாங்க தயக்கம் காட்ட வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இவ்வாறு நடிகர் விஜயின் படத்தை வாங்காமல் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தெறித்து ஓடுவதற்கான காரணம், சமீபகாலமாக நடிகர் விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே சில பிரச்சினைகள் நடந்து வருவதாகவும்,

இதனாலேயே உதயநிதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த விடவில்லை என்றும் ர்ச்சைகள் வந்தன. இப்போது இந்த ஏரியாவை ரெட் ஜெயண்ட் வாங்கி விட்டது என தெரிந்தால் மிரட்டித்தான் வாங்கியிருக்கிறார்கள் என்று ஒரு புதிய சர்ச்சை வந்து விடும். அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.