யார் எக்கேடு கேட்டு போகட்டும்… நம்ம காசு பாக்கணும்… ரஜினியின் இரக்கமற்ற செயல்..

0
Follow on Google News

ரஜினி சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பல கோடி வசூல் செய்யக்கூடியவராக திகழ்ந்தாலும் அவருடைய அடிப்படை கொள்கை என்பது சொந்தமாக படம் தயாரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாக படம் தயாரித்து இதற்கு முன்பு பலத்த அடி வாங்கி நஷ்டத்தையும் சந்தித்தவர். அவருடைய படத்தில் பணியாற்றும் உதவி இயக்குனர்களிடம் கூட நீங்கள் ஒரு காலத்தில் பெரிய இயக்குனராக வந்தால் சொந்தமாக மட்டும் படம் எடுத்து விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்யக் கூடியவர் ரஜினிகாந்த்.

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் அதிக சொத்துக்களை வாங்கி எதிர்காலத்திற்கு தேவையானதை சேர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர படம் எடுத்து சம்பாதித்த பணத்தை இழக்க கூடாது என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்து வருவதால் தான் இன்று அவரிடம் பல கோடி சொத்துக்கள் குவிந்து கிடக்கிறது. இப்படி ரஜினிகாந்த் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களை பாதுகாத்தாலே பல தலைமுறைகளுக்கு ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் ஏக போக வாழ்க்கை வாழ்ந்து விடலாம்.

ஆனால் தாங்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு சொந்த தயாரிப்பில் ஐஸ்வர்யா எடுத்த முதல் படம் 3 படு தோல்வி, இரண்டாவது மகள் அவருடைய அப்பா ரஜினிகாந்தை வைத்து இயக்கி சொந்தமாக தயாரித்த முதல் படம் கோச்சடையான் மிக பெரிய தோல்வி. இப்படி சொந்தமாக படம் எடுத்து இரண்டு மகள்களும் மிகப்பெரிய நஷ்டத்தை தந்தைக்கு ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதன் பின்பு நீங்க இருவரும் சினிமா பக்கமே வரவேண்டாம் குடும்ப குட்டியை பாருங்க என ரஜினிகாந்த் தன்னுடைய இரண்டு மகள்களுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து சில காலம் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தனர் ரஜினிகாந்த் இரண்டு மகள்கள். இந்நிலையில் சொந்தமா தானே படம் எடுத்தால் அப்பா கோப படுவார், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்கலாம் என மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்த ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா.

லைக்கா தயாரிப்பில் கேமியோ ரோலில் மிக பெரிய சம்பளம் பேசி தந்தை ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார், இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் தான் கேமியோ ரோல் செய்திருக்கிறார்கள், ரஜினி தான் மெயின் ரோல் செய்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இரண்டாம் பாதி முழுவதும் ரஜினி தோன்றினாலும், படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாமல் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

யார் நஷ்ட பட்டா என்ன நமக்கு பெரும் தொகை சம்பளம் வந்துருச்சு, மகள் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிறுச்சு என்கிற நோக்கில், லைக்கவுக்கு ரஜினியின் மூத்த மகள் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது போன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு இரண்டாவது மகள் நஷ்டத்தை ஏற்படுத்து களத்தில் இறங்கியுள்ளார். அதாவது கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஜினிகாந்த் இரண்டாவது மகள் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்தது போன்று கேமியோ ரோலில் நடிக்க பெரும் தொகை சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் எத்தனையோ திறமையான இயக்குனர்கள் ரஜினியின் கால் சீட்காக காத்திருக்க, தன்னுடைய இரண்டு மகள்களும் திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு ஒர்த்து இல்லை என்று நன்கு உணர்ந்த ரஜினிகாந்த், நமக்கு நல்ல சம்பளம் கிடைக்குது, மகள் படம் எடுக்க வேண்டும் ஆசை நிறைவேறுகிறது, இதில் யார் நஷ்டம் அடைந்தால் நமெக்கென்ன என மகள்களுக்கு கால் சீட் கொடுத்து தயாரிப்பாளர்களை ரஜினிகாந்த் நஷ்டம் அடைய செய்வது, யார் நாசமா போன நமக்கென நம்ம குடும்பம் நல்லா இருந்தால் போதும் என்கிற சுயநலம் உள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.