ரசிகர்களை ரத்தம் சிந்த வைத்து குளிர் காய நினைக்கும் விஜய்… இப்படி ஒரு கேவலம் தேவை தானா.?

0
Follow on Google News

இன்றைய அரசியலில் நாகரிகம் என்பது எங்கே கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு அரசியல் பிரமுகர்களும் அநாகரிகமான பேச்சின் மூலம் அரசியலை தரம் தாழ்த்தி கொண்டிருக்கிறார்கள், இப்படி அநாகரிக அரசியல் உச்சத்தில் இருக்கும் கலகட்டத்தில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், மேடை நாகரிகத்தை அவர் கடைப்பிடிப்பார் என்பதை தாண்டி, அவருடன் இருப்பர்வர்களும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் அநாகரிகமாக பேசினால் உடனே விஜய் அவருடைய கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே அவரால் நாகரிகமான அரசியலை முன்னெடுத்து செல்ல முடியும்.

மேலும் ஒரு அரசியல் தலைவருக்கு மேடை பேச்சு என்பது மிக முக்கியம், அன்று கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றார் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்களின் பேச்சாற்றல் தான். இதில் குறிப்பாக விஜயகாந்த் கையில் எந்த ஒரு துண்டு சீட்டும் இல்லாமல் மனதில் பட்டத்தை எதார்த்தமாக பேசியதால் தான் மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கிறார் விஜயகாந்த்.

ஆனால் விஜய் அவருடைய ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசுவது கூட, பல முறை வீட்டில் ரிகர்சல் பார்த்துவிட்டு, அதை அப்படியே பேசிவிட்டு செல்ல கூடியவர் தான் விஜய் என்கிற விமர்சனம் உண்டு, மேடையில் விஜய் பேச கூடிய குட்டி கதை கூட அப்படி ரிகர்சல் பார்த்துவிட்டு வந்து மேடையில் பேச கூடியவர் தான் விஜய் என்றும், அந்த வகையில் யாரோ ஒருவர் தயார் செய்து கொடுத்த ஸ்கிரிப்ட் டை பிரிப்பர் செய்து மேடையில் பேச கூடியவர் தான் விஜய்.

அதனால் தான் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் குறித்து நடிகர் சரத்குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது, அதற்கு அதே மேடையில் பதில் கொடுத்து விஜய் முற்று புள்ளி வைத்திருந்தால், காக்கா கழுகு கதை வரை பிரச்சனை சென்று இருக்காது, ஆனால் விஜய் சகிரிப்ட்டில் இல்லாத ஒன்று, சரத் குமார் பேசியதற்கு என்ன பதில் தருவது என்கிற குழப்பம் அதனால் தான் விஜய் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் சரத்குமார் பேசிய சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதில் தராமல் கடந்து சென்று விட்டார் என்கிறன்ற விமர்சனமும் உண்டு.

அந்த வகையில் விஜய் அரசியல் களத்தில் முழு வீச்சில் இறங்கும் போது, எப்படி மேடை பேச்சுக்களை கையாள போகிறார், எப்படி பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் கொடுக்க என்பதை பொறுத்து தான், அவருடைய அரசியல் எதிர்காலம் அமையும், மேலும் விஜய் மற்றும் அவருடைய ரசிகர்கள் சமீப கால நடவடிக்கைகள் அனைத்தும் எதோ உள்நோக்கத்துடன் செயல்படுவது போன்று அமைந்து உள்ளது.

அடிக்கடி ரசிகர்ளை அனுமதியின்றி ஓன்று கூட்டி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்ப்படுத்தும் விதத்தில் செலஃபீ எடுப்பது. மேலும் விஜய் கட்சி தொடங்கி இன்னும் கட்சி கொடி, சின்னம் எதுவுமே அறிமுகம் செய்யாமல் கோட் படத்தில் பிசியாக இருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் அவருடைய மக்கள் மன்ற கொடியை போலீஸ் அனுமதியின்றி நடுவது போன்ற சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் செயல் அரங்கேறி வருகிறது.

எந்த அமைப்பும், எந்த கட்சியும் கொடி மரம் நடலாம், ஆனால் முறையாக காவல் துறையில் அனுமதி பெற்று நடவேண்டும், விஜய் ரசிகர்கள் அனுமதியில்லாமல் கொடி கம்பம் நடுவது, போக்குவரத்து, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் விஜய் அவருடைய ரசிகர்களை ஓன்று கூட்டி செலஃபீ எடுப்பது போன்ற செயல்கள், போலீசாரை விஜய் ரசிகர் மீது தடி அடி நடத்தும் சூழலுக்கு தள்ளுகிறது.

ஆனால் இதை விஜய் திட்டமிட்டே ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினால், தன்னுடைய ரசிகர்களுக்கு ஏற்படும் ரத்த காயங்களை வைத்து அரசியல் செய்ய விஜய் துடிக்கிறாரா என சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் மீது கைவைத்தால் அதை வைத்து விஜய் அரசியல் செய்வார் என்பதை நன்கு அறிந்த ஆளும் திமுக அரசு எதுக்கு நாமலே வளர்த்து விடுவது என சுதாரித்து கொண்டு விஜயின் திட்டத்தை தவிடு பொடியாக்கி உங்க கனவு எங்க கிட்ட நடக்காது விஜய் என விஜய் ரசிகர்களை பொறுமையாக ஆளும் தரப்பு கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.