கீர்த்தி சுரேஷை பின்னின்று இயக்கும் விஜய்… ஜெயலலிதா போன்று அரசியலில் கீர்த்தி சுரேசை களம் இறக்கும் விஜய்…

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவித்து அதிரடியாக அரசியலில் குதித்துள்ளார் விஜய். கைவசம் இருக்கும் படத்தை முடித்துவிட்டு, அடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ள விஜய், வரும் நாடாளுமன்ற தேர்தல் நம்முடைய இலக்கு இல்லை, 2016 சட்டசபை தேர்தலில் களம் இறங்குவோம் என அரசியல் அறிவிப்பை வெளியிட்டு தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார் விஜய்.

இந்நிலையில், விஜய் அரசியல் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானாலும் கூட அவருடைய அரசியல் வருகைக்கான அணைத்து முன்னேற்பாடுகளும், முன்பே திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் விஜய், அந்த வகையில் அரசியல் களத்தில் அதிரடியாக இறங்கும் போது, தனக்கு உதவியாக அரசியலில் பயணிக்க கூடியவர்கள் யார் யார் என்பதையும் ஏற்கனவே முடிவு செய்து, அவர்களுக்கான அரசியல் பார்முலாவையும் வகுத்து கொடுத்து அதன் படி செயல்படும்படி வலியுறுத்து உள்ளார் விஜய் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விஜய் அரசியலில் இறங்கினால், மக்கள் மத்தியில் பம்பரம் போல் சுற்றி பிரச்சாரம் செய்யும் வகையில் ஆட்கள் நமக்கு வேண்டும் என்பதை நன்கு உணர்துள்ளார் விஜய். இந்த நிலையில் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அந்த படத்தில் நடிக்கும் போதே விஜய் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மேலும் விஜய் உடன் ஜோடியாக நடித்த பின்பு விஜய்யின் தீவிர ரசிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ், விஜய் நடிக்கும் படத்தின் முதல் ஷோ பார்த்து கொண்டாடுவதுமாக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், விஜய் அரசியலுக்கு வர இருப்பது அறிந்து ஏற்கனவே நீங்கள் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியில் இணைந்து தான் உங்கள் வெற்றிக்கு பணியாற்ற தயார் என்கிற விருப்பத்தை விஜயிடம் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

உடனே கீர்த்தி சுரேஷ் விருப்பத்தை ஏற்று கொண்ட விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பு பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும், ஒரு பெண்ணியவாதியாக, பெண் போராளியாக கதாபாத்திரகளை தேர்வு செய்து நடித்தால், அது கீர்த்தி சுரேஷ் எதிர் கால அரசியலுக்கு உதவியாக இருக்கும் என அட்வைஸ் செய்த விஜய், தன்னுடைய மேனேஜர் ஜெகதீசை கீர்த்தி சுரேஷ் உடன் இருந்து அவருக்கு தேவையான உதவியை செய்ய வலியுறுத்தி உள்ளார் விஜய்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோயின் சப்ஜெட் படமான ரிவால்வர் ரீட்டா படத்தை விஜய் மானேஜர் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இந்த படத்தை ஜெகதீஸ் தயாரிப்பதற்கு பின்னணியில் இருந்து பண உதவி செய்து வருவது விஜய் தான் என்று கூறப்படுகிறது.மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் கதை முதல் அவருடைய கால் சீட் வரை அனைத்தையும் கவனித்து வருவது விஜய் மானேஜர் ஜெகதீஸ் தான் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது சினிமா வாயிலாக விஜய் வழிகாட்டுதலின் படி தன்னை அரசியலுக்கு தயார் படுத்திகொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து, எம்ஜிஆர் அரசியல் வெற்றிக்கு எப்படி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து எப்படி ஜெயலலிதா உறுதுணையாக இருந்தாரோ, அதே போன்று விஜய் அரசியலுக்கு துணையாக நிச்சயம் கீர்த்தி சுரேஷ் இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.