வங்கி கணக்கில் ஊழல் பணம்… சிக்கிய அன்பில் மகேஷ் மனைவி… கமிஷன் தொகையே இத்தனை கோடியா.?

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் அரங்கேறிய பள்ளி கல்வித்துறை ஊழல் விவகாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது, இதில் தன்னுடைய குடும்பத்தாரை சிக்கவிடாமல் காப்பாற்றி விட வேண்டும் என அன்பில் மகேஷ் எடுத்து முயற்சி அனைத்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரம் மிக தீவிரமாக செல்ல முக்கிய காரணம் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல் விவகாரங்களில் எந்த வகையில் சமரசமே இல்லை என்பதில் உறுதியாக இருப்பது தான் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் அங்கீகாரம் வழங்க சுமார் 50 லட்சம் வரை பெற்று இருப்பதை கணக்கிட்டாலே பல நூறு கோடியை தாண்டும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, இந்நிலையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது மனைவிக்கு வசூல் செய்து கொடுத்ததில் பி டி அரசகுமார் சிறையில் உள்ளார் மற்றொருவரான முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிறார், இவர் வடமாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமாக இடம் மாறி தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்துக்குமார் வாங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்ததில் முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் மனைவி வாங்கி கணக்குக்கு சுமார் 3.25 கோடி பணம் பரிமாற்றம் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி அன்பில் மகேஷ் மனைவி வங்கி கணக்குக்கு முத்துக்குமார் அனுப்பியபோது, கமிஷன் தொகை என அவர் குறிப்பிட்டு அனுப்பியதை போலீசார் கண்டு பிடித்து இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த கமிஷன் தொகை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கிய ஊழல் பணத்தின் கமிஷன் தொகையா அல்லது வேறு ஏதும் டெண்டர் கொடுத்ததில் பெறப்பட்ட கமிஷன் தொகையா என்கிற விசாரணையையும் தோண்டி எடுக்க தொடங்கி இருக்கிறதாம் போலீசார், இந்நிலையில் ஏற்கனவே சிறையில் இருக்கும் பி டி அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தில் வசூல் செய்த பணத்தை அன்பில் மகேஷ் மனைவியிடம் தான் கொடுத்தே என விசாரணையில் தெரிவித்து இருக்கிறார் என தகவல் வெளியானது.

தற்பொழுது தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்கில் இருந்து சுமார் 3.25 கோடி ரூபாய் அன்பில் மகேஷ் மனைவி வங்கி கணக்கு மாறி இருப்பதும், அதுவும் கமிஷன் தொகை என முத்துக்குமார் குறிப்பிட்டு இருந்தது, அடுத்தடுத்து கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் நடந்த ஊழலில் அன்பில் மகேஷ் மனைவிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் தொடர்ந்து சிக்கி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் விரைவில் அன்பில் மகேஷ் மனைவி விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் மனைவி சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் அவருக்கு சாதகமாக அமையாத சூழலில் உள்ளது.

குறிப்பாக நீதிமன்றத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கு , தான் முன்னாள் அமைச்சர் என்பதால் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பதியப்பட்டுள்ளது, அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார், ஒரு வேலை இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால் கூட, மீண்டும் ஆளுநர் ஒப்புதல் பெற்று அன்பில் மகேஷ் மீது எப் ஐ ஆர் போட்டு கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆகையால் கடந்த திமுக ஆட்சியில் நடந்த பள்ளி கல்வி துறை ஊழலில் குடும்பத்துடன் சிக்கி இருக்கும் அன்பில் மகேஷ், தற்காலிகமாக நீதிமன்றம் மூலமாக தன்னுடைய கைதில் இருந்து தப்பிக்கலாமே தவிர, நிரந்தரமாக தப்பிக்க வாய்ப்பில்லை, அந்த வகையில் தவெக ஆட்சியில் முன்னாள் திமுக அமைச்சர்களின் கைதில் முதல் கைதாக அன்பில் மகேஷ் இருப்பார் என எதிர்ப்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here