புகாரை மாற்றி மாற்றி கொடுக்கும் ஐஸ்வர்யா… வருமான வரித்துறைக்கு பயந்து கொண்டு இப்படி செய்கிறாரா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி ஈஸ்வரி, நாளடைவில் ஐஸ்வர்யாவின் நம்பிக்கையை பெற்ற ஈஸ்வரி, வீட்டில் உள்ள அணைத்து அறைகளுக்கும் தன்னுடையை சொந்த வீட்டில் நுழையும் அளவுக்கு செல்லும் உரிமையை பெற்றுள்ளார் ஈஸ்வரி. இதனால் வேலைக்காரி என்பதை தாண்டி நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடம் வரை நன்கு அறிந்தவர் ஈஸ்வரி.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை ஐஸ்வர்யா திறந்து பார்த்த போது, அதில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரகசியமாக விசாரித்து ஈஸ்வரியின் வங்கி கணக்கை ஆராய்ந்த போது தான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வேலைக்கார பெண் ஈஸ்வரி தான் நகைகளை திருடி சொகுசு பங்களா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்கள். 60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்றது தெரியவந்தது.

அதில் கிடைத்த பணத்தில் சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து நடை பெற்ற விசாரணையில் விசாரணையின் போது ஐஸ்வர்யா வீட்டில் மாடு மாதிரி உழைத்த எனக்கு, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை ஐஸ்வர்யா அதனால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி.அந்த திருட்டுகளை ஐஸ்வர்யா கண்டுபிடிக்காததால், பின்னர் நகைகளை திருட தொடங்கியதாகவும், அதை வைத்து தான் வீடு வாங்கியதாக தெரிவித்த ஈஸ்வரி.

மேலும் இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் நிறைய திருடி இருப்பேன் எனவும் கூறி இருக்கிறார். நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன். இது தான் தன்னை திருட தூண்டியதாகவும் போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். விசாரணையின் போது எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என போலீஸ் கேட்டதற்கு மாதம் 30 ஆயிரம் தான் கொடுத்தார்கள் என்று தெரிவித்த ஈஸ்வரி. அந்த பணம் போதுமானதாக இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்றது விசாரணையில் தெரியவந்த நிலையில், ஐஸ்வர்யாவோ வெறும் 60 பவன் தான் திருடு போனதாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது விசாரணையில் அதிக 100 பவுனுக்கு மேல் திருடியுள்ளது தெரிய வந்த நிலையில், தற்பொழுது ஐஸ்வர்யா தன் வீட்டில் திருடு போன நகை மொத்தம் 200 பவன் என புதிதாக ஒரு புகாரினை போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா இப்படி மாற்றி மாற்றி புகார் கொடுத்து வருவது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் வருமான வரித்துறைக்கு முறையான கணக்கு கட்டாததால் குறைந்த நகை காணாமல் போனது என ஐஸ்வர்யா புகார் கொடுத்தாரா.? அல்லது தனது வீட்டில் எத்தனை பவுன் நகை உள்ளது என்று கூட தெரியாத அளவுக்கு பொறுப்பில்லாம் ஐஸ்வர்யா இருக்கிறாரா என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.