தந்தை ரஜினியை வைத்து டீல் பேசிய ஐஸ்வர்யா… அப்பாவை இப்படியெல்லமா பயன்படுத்துவார்கள்.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், பெயர், புகழ், பணம் என அளவுக்கு அதிகமாக தன்னிடம் இருந்தாலும், எனக்கு பத்து சதவீதம் கூட நிம்மதி இல்லை என்று அவர் பேசியதை பார்த்தவர்கள் மனம் உருகும்படி இருந்தது. வயதான காலத்தில் ஒரு மனிதன் நிம்மதியின்றி தவிக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவருடைய குடும்பமாகத்தான் இருக்கும்.

ஆகையால் ரஜினிகாந்தின் மனைவி மற்றும் மகள்களுக்கு எதிரான விமர்சனங்கள் அப்போது கடுமையாக வைக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் தங்களை ஏதோ ஒரு வகையில் பிரபலமானவர்கள் என்று காட்டிக் கொள்ள தந்தை ரஜினிகாந்தை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் முயற்சி செய்து தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

இந்தியா முளுவதும் திறமை வாய்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் இருக்கையில் சர்வதேச பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பரதநாட்டியம் ஆடுவதற்கு, இந்தியாவின் சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வாய்ப்பை ஐஸ்வர்யா பயன்படுத்திக் கொண்டாலும், அந்த சர்வதேச நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஆடிய பரதநாட்டியம் கடும் கேலி கிண்டலுக்கு உண்டானது.

இதைவிட பரதநாட்டியத்தை யாரும் கேவலப்படுத்த முடியாது என்கின்ற விமர்சனம் ஐஸ்வர்யாவுக்கு எதிராக எழுந்தது. இந்நிலையில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கின்ற ஆசையில் இரண்டு படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா, அந்த இரண்டு படமும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கிய அனுபவம் இருக்கின்றது என்று தந்தை ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார் ஐஸ்வர்யா.

ஆனால் ஏற்கனவே இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தினால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் ரஜினிகாந்த். இதை மனதில் வைத்து மூத்த மகளுக்கு கால் சீட் கொடுக்கவில்லை. இதன் பின்பு வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்க முடிவு செய்து சமீப காலமாக அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

ஆனால் ஐஸ்வர்யாவின் படத்தை தயாரிப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன் வரவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து லைக்கா தயாரிப்பில், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் கமிட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் லைக்கா தயாரிப்பதற்கு பின்னணியில் கடுமையாக வேலை பார்த்தவர் ஐஸ்வர்யா என்றும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா கதையை தயார் செய்து தன்னுடைய படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்களை அணுகியுள்ளார். ஆனால் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் ஐஸ்வர்யா இயக்கம் படத்தை தயாரிக்க முன்வரவில்லை.தொடர்ந்து அனைத்து தயாரிப்பு நிறுவனமும் ஐஸ்வர்யாவை புறக்கணித்து வந்தது.

இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திடம் ஐஸ்வர்யா ஒரு டீல் பேசியுள்ளார். அதில் என்னுடைய தந்தை படத்தை தயாரிக்க உங்களுக்கு கால்ஷீட் வாங்கித் தருகிறேன். ஆனால் அதற்கு அதற்காக தான் இயக்கும் படத்தையும் நீங்கள் தயாரிக்க வேண்டும். இந்த டீல் ஓகே என்றால் என்னுடைய தந்தையை உங்களுடைய தயாரிப்பில் நடிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு என்று ஐஸ்வர்யா டீல் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த டீலுக்கு லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அதே போன்று சொன்ன டீல் படி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தந்தை ரஜினிகாந்தை வைத்து டீல் பேசி சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.