விடுதலை படத்தில் நம்பிக்கை இழந்த வெற்றிமாறன்.. தயாரிப்பாளர் வாயை அடைக்க என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கி சுமார் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் திரைக்கு வராமல் தாமதமாகி கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை. காமெடி நடிகராக உச்சத்தில் இருந்த நடிகர் சூரியை விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கின்றேன் என்று, சூரிக்கு ஹீரோ ஆசையை தூண்டி விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகம செய்து, சூரியின் காமெடி வாய்ப்புகளை காலி செய்துள்ளார் வெற்றிமாறன்.

ஆரம்பத்தில் விடுதலை படத்தில் சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் விஜய் சேதுபதியை என்ட்ரி கொடுக்க வைத்தார் வெற்றிமாறன். மேலும் சூரி நடித்தகாட்சிகளை விட விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் விடுதலை படத்தில் அதிகம் இடம்பெறும் வகையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதனால் இதனால் சூரியின் ஹீரோ கனவிலும் மண்ணை அள்ளிப்போட்டுள்ளார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களைக் கடந்தும் தொடர்ந்து விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் இப்படத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட அதிகம் செலவானதை தொடர்ந்து தயாரிப்பு தரப்பில் இருந்து வெற்றிமாறனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதற்கு விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகுகிறது என வெற்றிமாறன் விளக்கம் கொடுத்து தயாரிப்பு தரப்பை ஆஃப் செய்துள்ளார்.

வெற்றிமாறனால் பாதிக்கப்பட்டு வருவது விடுதலை படத்தின் தயாரிப்பாளர் மட்டுமில்லை அந்த படத்தில் கமிட்டாகியுள்ள ஆர்டிஸ்ட்களும் தான். விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி இருவரிடம் தொடர்ந்து கால் சீட் கேட்டு அவர்கள் மற்ற படத்தில் நடிக்க முடியாதபடி செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் பலமுறை கதைகளில் மாற்றம் செய்வது.

இதற்கு முன்பு எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் புதிய காட்சிகளை எடுத்து, பின்பு அதுவும் திருப்தி இல்லை என்று, அதையும் நீக்கிவிட்டு மீண்டும் புதிய காட்சிகளை படமாக்குவது. இப்படி இயக்குனர் வெற்றிமாறனும் குழம்பி, அந்த படத்தில் நடிக்கும் ஆர்டிஸ்ட்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார் வெற்றிமாறன்.

மேலும் விடுதலை படம் வெற்றி அடையுமா.? என்கிற சந்தேகம் தற்பொழுது அந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் எல்டர் குமாரிடம், விடுதலை படம் லாபம், நஷ்டம் இதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த படம் உங்களுக்கு நஷ்டத்தை பெற்று தந்தால், உங்கள் தயாரிப்பில் மேலும் ஒரு படம் செய்து தருகிறேன்.

தற்பொழுது நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார் வெற்றிமாறன். இந்த படத்தை எல்டர் குமார் தயாரிப்பில் எடுத்து விடுதலை படம் அடைய இருக்கும் நஷ்டத்தை சரி செய்து கொடுக்க இருப்பதாக தயாரிப்பாளரிடம் உறுதி கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை படத்தில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களுக்கு இந்த படம் ரிலீஸ் ஆனால் தான் வெற்றிமாறனிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்று பரிதாப படுகிறது சினிமா வட்டாரங்கள்.

error: Content is protected !!