சிம்பு செய்த அதே தவறை செய்த தனுஷ்…நம்பி மோசம் போனே ஐஸ்வர்யா…. தனுஷுக்கு சிம்புவே பரவாயில்லையாம்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே நடிகர் சிலம்பரசனை காதலித்து வருவதாக அப்போது செய்திகள் தொடர்ந்து வெளியானது, சிலம்பரசன் கதநாயனாக அவருடைய தந்தை இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது கூட சிம்பு – ஐஸ்வர்யா ஜோடி காதலித்து வந்ததாக அப்போது கூறப்பட்டது, குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வந்த சிலம்பரசன் கதநாயகனாக நடித்த முதல் படம் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து அடுத்தடுத்து கதநாயகனாக நடித்து வந்த சிலம்பரசன் அவ்வப்போது ஆஸ்திரேலியாவில் பட்ட படிப்புக்காக சென்ற காதலி ஐஸ்வர்யாவை பார்க்க பறப்பது போன்ற கிசு கிசு செய்திகள் வெளியானது, இப்படி உலகம் முளுவதும் பறந்து காதலை வளர்த்து வந்த எந்த ஜோடி, சிம்பு அலை படத்தில் நடித்த போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட தொடங்கியது, அலை படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த திரிஷா உடன் வெளியில் பொது இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வந்தார் சிம்பு.

இதை அறிந்த ஐஸ்வர்யா பலமுறை சிம்புவை கண்டித்ததாக கூறப்படுகிறது, ஆனால் அலை படப்பிடிப்பு முடிந்து சிம்பு அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிய பின்பும் கூட திரிஷா உடன் ஜோடியாக சுற்றி வந்துள்ளார். இதனால் சிம்பு – ஐஸ்வர்யா ஜோடி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடும் சண்டை வெடித்துள்ளது, இதனை தொடர்ந்து சிம்புவுடனான காதலுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு அவரை விட்டு ஐஸ்வர்யா பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கால கட்டத்தில் ஒரு பக்கம் தொடர்ந்து தோல்வி படங்களை மட்டும் கொடுத்து கொண்டிருந்த சிம்பு, மறுபக்கம் தொடக்கத்திலே தொடர் மூன்று வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தார் தனுஷ். இந்நிலையில் சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின் அன்று சிம்புவுக்கு போட்டியாக இருந்த தனுஷ் வெற்றிக்கு பூகொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா அதன் பின்பு தனுஷ் உடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார்.

பின் இவர்களின் நட்பு காதலாக உருவெடுத்ததை தொடர்ந்து தன்னை விட வயதில் இளையவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா, இதன் பின்பு தனது காதல் தோல்வியை வெளிப்படுத்தும் விதத்தில் ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்வது போன்று கதை அமைத்து மன்மதன் என்கிற படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் சிம்பு, இந்த படம் தொடங்கத்தில் சிம்பு தன்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றிவிட்டு சென்று விட்டதாக பேசுவது போன்ற காட்சி ஐஸ்வர்யாவை தான் மேற்கோள் காட்டுகிறார் என அப்போது பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் தொடர்ந்து சக நடிகைகள் உடன் கிசு கிசுவில் தனுஷ் சிக்கி வந்த நிலையில், சுமார் 18 வருடங்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை முடித்து கொண்டு பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளதற்கு , சிம்புவை எந்த ஒரு காரணத்திற்காக வேண்டாம் என தனது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டு ஐஸ்வர்யா வெளியேறினாரோ, அதே காரணத்துக்காக தான் தற்போது தனுஷ் உடனான திருமண வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் ஐஸ்வர்யா என கூறபடுகிறது.

error: Content is protected !!