ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா அஜால் குஜால்… கள்ளகாதலர்கள் போல் கையும் களவுமாக மாட்டியது எப்படி.?

0

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இருவரும் பிரிவதாக அறிவித்த போது ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் இருவரும் தங்கி இருந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமா இருவரும் பேசி இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பு வரை ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

ஆனால் பிரிவதாக அறிவித்த பின்பு அதே ஓட்டலில் தனி தனி அறையில் தங்கி இருவரும் அவரவர் சினிமா பணிகளை செய்து வந்தனர். தனுஷ் -ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனைகள் நடந்து வந்துள்ளது, இதற்கு காரணம் தனுஷ் சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்குவது, இரவு பார்ட்டிகளில் லூட்டி அடிப்பது, என தன்னுடன் நடிக்கும் பெருமபாலான நடிகைகளிடம் நெருக்கமாக இருந்து வந்தது தான் என தகவல் வெளியானது.

இருந்தும் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெற்றாலும், பின்பு இருவரும் பேசி சரி செய்து கொண்டனர், ஒரு சில நேரங்களில் இரண்டு குடும்பத்தினரும் பேசி இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரி செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த உச்சக்கட்ட மோதலில் காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வார்த்தை தகராறு காரணமாக, பொது தளத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர்.

இவர்கள் பிரிவதாக அறிவித்த பின்பு இரண்டு குடும்பத்தினரும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆந்திராவில் இருக்கும் போதே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் இருவரும் மீண்டும் இணைவதில் விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், மீண்டும் இணைவதில் சிக்கல் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இருவருடைய குடும்பத்தினர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியை தழுவியது. இருந்தும் இருவரின் குடும்பத்தினர் இருவரிடம் அப்போது ஒரு கோரிக்கை வைத்தனர்.

அதில்,இருவரும் பிரிவதாக அறிவித்ததோடு நிற்கட்டும், உங்கள் விருப்பப்படி பிரிந்து வாழுங்கள், ஒரு கட்டத்தில் நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புகள் உள்ளது, அதனால் உங்கள் இரண்டு குழந்தைகள் நலன் கருதி விவாகரத்து வரை செல்ல வேண்டாம் என தெரிவிக்க, இதை ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் ஏற்று கொண்டனர். இதனை தொடர்ந்து மனைவியை விட்டு பிரிந்த சில நாட்களில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் தனுஷ்.

ஆனால் ஐஸ்வர்யா திட்டவட்டமாக மறுத்து விட்டார், மேலும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கினார் ஐஸ்வர்யா, இதன் பின்பு இனி தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் இணைவதில் சாத்தியம் இல்லை என கூறப்பட்டது. ஆனால் தனுஷ் சினிமாவில் ஏற்பட்ட சரிவு மற்றும் குழந்தைகள் நலன் கருதி மீண்டும் மனைவி ஐஸ்வர்யா உடன் இணைய தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதில் தனுஷ் நடிக்கும் திருசிற்றம்பலம் படத்திற்கு இசை அமைக்கும் அனிரூத் உதவியை நாடியுள்ளார், இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் தொடர்ந்து பேசி வந்த அனிருத், உங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை இருவரும் சந்தித்து பேசி சரி செய்து கொள்ளலாம் என்று இருவரையும் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார் அனிரூத். இந்த சந்திப்பின் போது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீண்ட நேர்ம் மனம் விட்டு பேசியவர்கள் அதன் பின்பு தொடர்ந்து தொலைபேசியிலும் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஆரியபுரத்தில் உள்ள ஒரு பிளாட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கு முன்பு வரை வசித்து வந்துள்ளனர். அந்த பிளாட்டின் நுழைவுவாயிலில் தனுஷ் – ஐஸ்வர்யா என இருவருடைய பெயரிடப்பட்டுள்ள பலகை இன்றுவரை இருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக அடிக்கடி ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் இந்த வீட்டிற்கு வந்து தங்கி குடும்பம் நடத்திவிட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவன்-மனைவி இருவரும் இன்னும் விவாகரத்து பெறாமல், பிரிவதாக மட்டும் அறிவித்துள்ள நிலையில்,

அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஜாலியாக இருக்க யாருக்கும் தெரியாமல் கள்ளகாதலர்கள் போன்று ரகசியக்கமாக எதற்காக வந்து செல்ல வேண்டும், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மீண்டும் இணைந்து விட்டதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அல்லது குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு, கணவன் – மனைவியாக வெளிப்படையாகவே வாழலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?