தமிழக சட்டசபையில் திமுக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வெறும் வெற்று காகிதம் என்று சொல்லும் அளவிற்கு, மக்களின் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்கின்ற குற்றச்சாட்டு திமுக அரசை நோக்கி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளுக்கு, இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
இருந்தாலும் திமுக ஆட்சியின் இறுதி கட்டமான இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆவது ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்த்த மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது, குறிப்பாக திமுக கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகளில்,

எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், மீனவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும், மாதாந்திர மின்சார மீட்டர் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படும், மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதாந்திர நிதி வழங்கப்படும் என்று பல வாக்குறுதிகளை அள்ளி தெளித்த திமுக அரசு.
மேற்கண்ட எந்த ஒரு வாக்குறுதிகளுக்கும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அந்த வகையில் மேற்கண்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. அதேபோன்று திமுக ஆட்சியில் தொடர்ந்து போராடிவரும் தூய்மை பணியாளர்கள், அரசு ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் வரை ஆகியோரின் கோரிக்கைகளையும, இந்த திமுக அரசின் இடைக்காட பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருடத்திற்கு ஒருமுறை வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பயணம் ஏற்கிறார் என்கின்ற பரபரப்பு செய்திகளுக்கு விடை கிடைக்கும் வகையில், இதுவரை திமுக ஆட்சியில் கிடைத்த வெளிநாட்டு முதலீடுகள் எவ்வளவு.? அதனால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு வாய்ப்புகள் எத்தனை.? என்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் கேள்விகளுக்கும் திமுக அரசியலமைந்து இதுவரை பதில் இல்லை.
மேலும் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக அரசின் நிர்வாகத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்த, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் திமுக தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பேரிடர் மேலாண்மை க்கு மத்திய அரசு மிக குறைவான நிதியை மட்டும் வழங்குவதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த நிலையில்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய நிவாரண நிதியிலிருந்து 1364 கோடி மற்றும் மாநில பேரிடர் எதிரொலி நிதியிலிருந்து 4500 கோடி ரூபாய் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வழங்கி இருக்கிறது என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு போதிய நிதியை வழங்க வில்லை என்பதை பொய் என்பது அம்பலமாகி உள்ளது.
மாநில கடனை குறைக்க உயர்மட்ட நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்று இதற்கு முன்பு திமுக அரசு தெரிவித்து இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில கடனை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும் கூட, அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு இரண்டு மடங்காக கடன் அதிகரித்து தற்பொழுது தமிழ்நாட்டின் மொத்த கடன் 10 புள்ளி 62 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
மொத்தத்தில் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் முழுக்க முழுக்க விளம்பரத்திற்காக தயாரிக்கப்பட்டதே தவிர தமிழக மக்களின் நலனுக்காக எந்த அறிவிப்பும் இல்லை என்கிற குற்றசாட்டு ஓங்கி ஒலித்து வருகிறது.

